ஐபோன் இயக்கமாற்றல் உங்கள் உத்தரவாதத்தை சுழியமாக்குகிறது, ஆப்பிள் அறிவிப்பு
புதன், சூலை 28, 2010
அமெரிக்கப் பதிப்புரிமை அலுவலகத்தின் ஆளல் ஐபோன் இயக்கமாற்றல் சட்டப்பூர்வம் உண்மையில் ஒரு பொருட்டல்ல, கூடவே உங்கள் தெளிவானப்பேசியின் (smartphone) உத்தரவாதம் சுழியமாகிறது. ஆப்பிள் நிறுவனம் தமது வாடிக்கையாளர்களுக்கு அளித்த கூற்றில் ஐபோன் இயக்கமாற்றல் அவர்களின் சாதனத்தின் உத்தரவாதத்தை இழக்கிறது, அப்படியென்றால் அவர்கள் பேசியில் கோளாறு ஏற்படும் பொழுது இவ்வாறு செய்வதினால் இலவயமாகச் சரிசெயதல் முடியாது.
"ஆப்பிளின் கொள்கை எப்பொழுதும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் ஐபோனுடன் ஒரு பெரும் அனுபவம் கிடைக்கும்படி காத்துவருகிறது. மேலும், இவ்வாறான இயக்கமாற்றல் கடுமையாக அந்த அனுபவத்தை குறைத்துவிடும் என்பதை நாங்கள் அறிவோம்".
"நாங்கள் முன்பு சொன்னதைப் போன்று, அனைத்து வாடிக்கையாளர்களும் இது உத்தரவாதத்தை இழப்பதினாலும், சாதனம் சரிவர வேலை செய்யாமல் போகக்கூடும் என்பதினாலும், ஐபோனை இயக்கமாற்றம் செய்யக்கூடாது" என்று அந்த நிறுவனம் திங்களன்று பதில் கூறியது.
இயக்கமாற்றல் செயல்முறையினால் வெளி இயக்கமாற்று பயனிகளை நிறுவவும், ஐபோன் திரையை ஒளிப்பதிவு செய்யவும், புளுடூத் வழி கோப்புகளை அனுப்பி பெறவும் இயல்பிறப்பு ஒலி எச்சரிக்கைகள், அறிவிப்புகள் ஆக்கியவற்றை இயலச் செய்யலாம்.
மூலம்
[தொகு]- Never Mind Legality, iPhone Jailbreaking Voids Your Warranty, பீசி வேர்ல்ட்; ஜூலை 28, 2010