கொலம்பிய உதைபந்தாட்ட அணியினர் கடத்தப்பட்டுக் கொல்லப்பட்டனர்

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, அக்டோபர் 25, 2009


இரு வாரங்களுக்கு முன்னர் கடத்தப்பட்ட கொலொம்பியாவின் லாஸ் மானிசரஸ் என்ற உதைப்பந்தாட்ட அணியினர் 10 பேரின் உடல்கள் வெனிசுவேலாவில் எல்லையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.


துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் காணப்பட்ட இந்த உடல்கள் டச்சிரா என்ற இடத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டன. உதைப்பந்தாட்ட அணியின் ஒருவர் தப்பியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.


"ஈஎல்என்" (ELN) என அழைக்கப்படும் இடதுசாரி கெரில்லா அமைப்பினரே இக்கொலைகளைச் செய்திருக்க்கலாம் என கொலம்பிய அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.


கண்டுபிடிக்கப்பட்ட உடல்கள் கடத்தப்பட்ட உதைப்பந்தாட்ட வீரர்களுடையது தானா என அறிய கொலம்பிய அதிகாரிகள் விசாரணை செய்து வருகிறனர். ஆனாலும், டச்சீராவின் உள்ளூர் அதிகாரிகளும், உள்ளூர் பத்திரிகைகளும் உதப்பந்தாட்ட வீரர்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள் என அறிவித்து வருகின்றனர்.


நாட்டில் இராணுவத்தில் கட்டாய ஆட்சேர்ப்புக்கு எதிராகவே கிளர்ச்சியாளரின் அண்மைக்கால வன்முறைகள் ஆரம்பிக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது.

மூலம்