உள்ளடக்கத்துக்குச் செல்

சர்வதேச மிதிவெடி நடவடிக்கைத் தினம் 2012

Checked
விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், ஏப்பிரல் 5, 2012


மிதிவெடி அபாயக் கல்வி நாடகம்

மிதிவெடிகள் பற்றிய விழிப்புணர்வுக்கான சர்வதேச தினத்தையொட்டி 2012 ஆம் ஆண்டுக்கான சர்வதேச மிதிவெடி நடவடிக்கை தின நிகழ்வுகள் வவுனியா நகர சபை மண்டபத்தில் நேற்று 2012 ஏப்ரல் 4 ஆம் நாள் காலை 9 மணிமுதல் 12 மணிவரையும் நடைபெற்றது அதைத் தொடர்ந்து கண்காட்சி மாலை 4 மணிவரை நடைபெற்றது.


இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக வவுனியா அன்றைய அரச அதிபர் திருமதி சார்லசும் கௌரவ விருந்தினராக வன்னிப் பாதுகாப்புப் படைத்தலமை அலுவலகத்தின் கட்டளைத்தளபதி பெரேராவும் கலந்து சிறப்பித்தனர். ஆரம்பத்தில் விருந்தினர்கள் பாண்ட் வாத்தியம் சகிதம் அழைத்துவரப்பட்டனர். அதைத்தொடர்ந்து வரவேற்பு நடனம் நடைபெற்றது. தொடர்ந்து சேட், கிராமிய அபிவிருத்தி அமைப்பு, பீப்பிள் விஷன் அமைப்புக்கள் நடத்திய நாடகமும் நடைபெற்றது.


2020 ஆம் ஆண்டில் இலங்கையை கண்ணிவெடி அபாயமற்ற நாடாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக விழாவில் தெரிவிக்கப்பட்டது. பொருளாதார அமைச்சின் செலயாளர் கௌரவ பசில் இராசபட்ச வெளிநாட்டுகுச் சென்றிருந்ததால் மீண்டும் ஒரு நிகழ்வு கொழும்பில் 10 ஏப்ரல் 2012 இல் இடம்பெறுவதாகத் தீர்மானிக்கப்பட்டு அந்நிகவும் பின்னர் இடம்பெற்றது. .

வெளியிணைப்புக்கள்

[தொகு]


மூலம்

[தொகு]

கண்ணிவெடி அபாயம் நீங்குவதற்கு நீண்டகாலம் செல்லும் பிபிசி தமிழோசை.