வட, தென் கொரிய கடற்படைகளுக்கிடையில் மோதல்
செவ்வாய், நவம்பர் 10, 2009
வட கொரிய மற்றும் தென் கொரிய கடற் படைக்கப்பல்களுக்கு இடையில் செவ்வாய் அன்று மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தென்கொரிய செய்திகள் தெரிவித்துள்ளன.
வடகொரியாவும் தென்கொரியாவும் உரிமை கோரும் பிரச்சினைக்குரிய மேற்கு கடற் பகுதியில் இந்த மோதல் சம்பவம் இடம் பெற்றுள்ளதாகவும் பிரச்சினைக்குரிய அவ் மேற்கு கடற்பரப்பில் வைத்து தொன் கொரிய கடற்படைக்கப்பல் வடகொரிய கப்பல் மீது தாக்குதல் நடாத்தியதாக தென் கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
தென் கொரிய அதிகாரிகளின் கருத்துக்களை மேற்கோள் காட்டி ஊடகங்கள் கருத்து வெளியிடுகையில், வடகொரிய கப்பல் பலத்த சேதத்துக்கு உள்ளானதாகவும் தென் கொரியக் கடற் படை தரப்பில் எவ்வித சேதமும் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
1950 முதல் 1953 வரை இரு நாடுகளுக்கு இடையில் நடந்த உள்நாட்டுப் போரின் பின்னர் இன்றுவரை இவ்விரு நாடுகளும் தமது கடல் எல்லையை தீர்மானிப்பதில் இழுபறிப் பட்டுக் கொண்டுள்ளதும் இவ்வப்போது கடற் பரப்புகளில் மோதிக் கொள்வதும் குறிப்படத்தக்கது.
அண்மையில் ஐநா, அமெரிக்கா, மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் எச்சரிக்கையை மீறி வட கொரியா பல அணு ஆயுதங்களையும் ஏவுகணைகளையும் பரீட்சித்ததும் அதை தொடர்ந்து தனது இராணுவ நகர்வுகளை அதிகப்படுத்தியுள்ளதும் தொடர்ச்சியாக விமர்சிக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
மூலம்
[தொகு]- "Navies of 2 Koreas exchange fire". யாகூ! செய்திகள், நவம்பர் 10, 2009
- "Korean naval ships 'clash at sea'". பிபிசி, நவம்பர் 10, 2009