ஷங்காயில் பெரிய குடும்பங்களை ஊக்குவிக்க சீனா முடிவு

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, சூலை 24, 2009 ஷங்காய், சீனா:

மக்கள் சீனக் குடியரசில் நீண்டகாலமாக அமுலில் இருந்துவரும் அரசாங்க கொள்கையொன்றை பின்னோக்கித் தள்ளும் விதமாக, அந்நாட்டின் மிகப்பெரிய நகரமான ஷங்காய், தமது மக்கள் பெரிய குடும்பங்களை கொண்டிருப்பதை ஊக்குவிக்க தீர்மானித்துள்ளது.


1979 ஆம் ஆண்டில் ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர் சீன அதிகாரிகள் பெரிய குடும்பங்களை ஆர்வத்துடன் ஊக்குவிக்கும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.


எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய ஆளணிப் பற்றாக்குறையைத் தீர்க்கும் பொருட்டு, ஒரு குழந்தை கொண்ட குடும்பங்களில் இருந்து வந்த தம்பதியர் இரண்டு பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென நகரத்தின் குடும்பக்கட்டுப்பாட்டுத் திட்ட ஆணையத்தின் தலைமை அதிகாரி கூறுகிறார்.


2020 ஆம் ஆண்டில் ஷங்காயின் சனத்தொகையில் மூன்றிலொரு பங்காக 60 வயதைக் கடந்தவர்களே இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 2050 ஆம் ஆண்டளவில் ஒவ்வொரு முதியவரையும் கவனித்துக் கொள்ள 1.6 வேலை செய்யும் இளம் வயதினரே இருப்பர் எனப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. 1975 ஆம் ஆண்டில் இது 7.7 ஆக இருந்தது.

மூலம்[தொகு]