லொத்தரில் வெற்றி பெற்ற திருடர், காவல்துறை கைது

விக்கிசெய்தி இலிருந்து

சனி, சூலை 25, 2009 கனடா:


லொத்தர் சீட்டிழுப்பில் 4,4 மில்லியன் பரிசை வென்ற ஒருவர், அப்பணத்தை எடுக்கப்போன இடத்தில் கைதுசெய்யப்பட்ட சம்பவம் ஒன்று கனடாவில் நிகழ்ந்துள்ளது.


இதன் விபரம் வருமாறு:


45 வயதான இந்த நபர் கடந்த 2003 ம் ஆண்டு, திருட்டுச்சம்பவம் ஒன்றில் குற்றஞ்சாட்டப்பட்டவர். இந்த வழக்கில் இவர் நீதிமன்றத்துக்குச் சமுகமளிக்கத்திருக்கவில்லை.


அந்த லொத்தர் சபையின் ஊழியர் ஒருவரே இவர், நீதிமன்றத்தால் பிடியாணை விதிக்கப்பட்டவர் எனும் விபரத்தினைக் கணனியில் கண்டறிந்து காவற்றுறைக்குத் தகவல் வழங்கியிருந்தார். இந்தநபர் பரிசுத்தொகைக்கான காசோலைப் பெற்றுக்கொண்டதும், அங்கு தயாராகக் காத்திருந்த காவற்றுறை உத்தியோகத்தரால் கைவிலங்கிடப்பட்டு அழைத்துச்செல்லப்பட்டார்.


ஓரிரவு முழுவதும் நீதிமன்றக்காவலில் வைக்கப்பட்டுப் பின் பிணையில் விடுதலை செய்யப்பட்டார். அதன்பின், ஒருமாதம் கழித்து அவரது பழைய திருட்டுவழக்கு நீதிமன்றத்தினால் விசாரணைக்கு எடுக்கப்பட்டு, சமரசம் செய்துவைக்கப்பட்டது.

மூலம்[தொகு]