உள்ளடக்கத்துக்குச் செல்

மவுரித்தேனியா அரசுத்தலைவர் மீது துப்பாக்கிச் சூடு

Checked
விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, அக்டோபர் 14, 2012

வடமேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள மவுரித்தேனியா நாட்டின் அரசுத்தலைவர் முகமது அப்தெல் அசீசு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.


அரசுத்தலைவரை ஏற்றிச் சென்ற வாகனத் தொடரணி மீது தலைநகர் நவாக்சோட்டில் வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இச்சம்பவத்தில் அரசுத்தலைவருக்கு கையில் காயமேற்பட்டது. மருத்துவமனையில் அவருக்கு அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. மேலதிக சிகிச்சைக்காக வெளிநாடு செல்லவிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


ஆரம்பத்தில் படுகொலை முயற்சி ஒன்றில் இருந்து அரசுத்தலைவர் தப்பித்ததாக அரசுப் பேச்சாளர் தெரிவித்திருந்தாலும், பின்னர் ரோந்து சென்ற இராணுவத்தினரே தவறுதலாக துப்பாக்கிச் சூடு நிகழ்த்தியதாகத் தெரிவித்தார். இராணுவத்தினர் அந்தத் தொடரணி அரசுத்தலைவருக்குரியது எனபதை அறிந்திருக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.


2008 ஆம் ஆண்டில் இராணுவப் புரட்சியை அடுத்து பதவிக்கு வந்த முகமது அசீசு 2009 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்றார்.


மூலம்

[தொகு]