மாவீரர் நாள் 2012: யாழ் பல்கலைக்கழக மாணவர் மீது இராணுவம் தாக்குதல்
- 9 ஏப்பிரல் 2015: திருக்கோவில் விசேட அதிரடிப்படை முகாம் முற்றாக விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது
- 9 ஏப்பிரல் 2015: துன்புறுத்தியே வாக்குமூலம் பெறப்பட்டதாக யசீகரன் நீதிமன்றத்தில் தெரிவிப்பு
- 9 ஏப்பிரல் 2015: சிறை விதிக்கப்பட்ட திசைநாயகத்துக்கு 2 பன்னாட்டு விருதுகள்
- 6 ஆகத்து 2014: இலங்கை அரசு நியமித்த நிபுணர் குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை ஆறாக உயர்த்தப்படுகிறது
- 2 ஆகத்து 2014: 157 இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களும் நவூரு தீவுக்கு அனுப்பப்பட்டனர்
புதன், நவம்பர் 28, 2012
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஏழு மாணவர்கள் இன்று படையினரின் தாக்குதலில் படுகாயமடைந்து யாழ் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர்.
இன்று காலை பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெற்ற இந்த மோதல் நிலையை அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவனின் வாகனம் இராணுவப் புலனாய்வு பிரிவினரால் அடித்து சேதப்படுத்தப்பட்டுள்ளதாக வீரகேசரி செய்தி வெளியிட்டுள்ளது.
நேற்று மாலை 06:05 மணிக்கு வீடுகள், மற்றும் கோயில்களில் தீபங்கள் ஏற்றியும், மணியோசை எழுப்பியும் தமிழ் மக்கள் மாவீரர் நாளை நினைவு கூர்ந்தனர். பல இடங்களில் மாவீரர் நாள் சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டிருந்தன. யாழ். பல்கலைக்கழகத்துக்குள் நேற்று மாலை புகுந்த இராணுவத்தினரும் காவல்துறையினரும் மாணவர்களைத் தாக்க முயற்சித்ததில் பல்கலைக்கழக வளாகத்தில் பெரும் பதற்றம் நிலவியது. இந்த கெடுபிடிகளுக்கு மத்தியிலும் யாழ் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவுத் தூபிக்கு மாணவர் நேற்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
பல்கலைக்கழகத்துக்குள் இராணுவத்தினர் பிரவேசித்ததை அறிந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் பல்கலைக்கழக வளாகத்துக்குள் நேற்று சென்று நிலைமைகளை ஆராய்ந்தபோது அவர் மீது கல்வீச்சுத் தாக்குதலும் நடத்தப்பட்டுள்ளது. உதயன் பத்திரிகையின் ஆசிரியர் டி.பிரேமானந்த் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக வளாகத்துக்குள் இராணுவத்தினர் நேற்று உள்நுழைந்து மாணவர்களிடம் தவறான முறையில் நடந்து கொண்டதாகக் குற்றம் சுமத்தி பல்கலைக்கழக மாணவர்கள் இன்று புதன்கிழமை நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போதே ஏழு மாணவர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.
வன்னிப் பகுதியிலும் மாவீரர் நாள் நினைவு கூரப்பட்டது.
மூலம்
[தொகு]- 'படையினர் தாக்கி யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் காயம்' - பிபிசி, நவம்பர் 28, 2012
- பொலிஸாரின் தாக்குதலில் 7 மாணவர்கள் வைத்தியசாலையில் (படங்களுடன்), வீரகேசரி, நவம்பர் 28, 2012
- யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீது படையினர் தாக்குதல்: பதற்றம் தொடர்கிறது (படங்களுடன்), நவம்பர் 28, 2012
- யாழ். பல்கலை கலவரம்... (படங்களுடன்), தமிழ்மிரர், நவம்பர் 28, 2012
- உணர்வெழுச்சியுடன் மாவீரர் தினம் நேற்று, உதயன், நவம்பர் 28,2 102
- Peaceful student protest attacked by SL military in Jaffna - தமிழ்நெற், நவம்பர் 28, 2012