உள்ளடக்கத்துக்குச் செல்

லிபிய அகதிகளை ஏற்றிச் சென்ற கப்பல் துனீசியாவில் கவிழ்ந்ததில் 200 பேர் உயிரிழந்தனர்

Checked
விக்கிசெய்தி இலிருந்து

சனி, சூன் 4, 2011

துனீசியா அருகே நடுக்கடலில் நேற்று முன்தினம் லிபியாவில் இருந்து வெளியேறிய அகதிகளை ஏற்றிச் சென்ற கப்பல் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருநூறுக்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான நிறுவனம் அறிவித்துள்ளது.


இந்தக் கப்பலில் 850 பேர் வரையில் பயணித்ததாகவும் இதுவரையில் 578 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்கள், குழந்தைகள் உட்பட 150 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கடுமையான காற்று வீசியதாலும் அளவுக்கதிகமானோர் கப்பலில் பயணம் செய்ததாலும் இக்கப்பல் விபத்துக்குள்ளானது.


ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளைச் சேர்ந்த இவர்கள் லிபியாவில் இருந்து இத்தாலி நோக்கிச் சென்று கொண்டிருந்த போதே விபத்துக்குள்ளாக நெரிட்டது. உயிர் தப்பியோர் ஐநா அகதிகள் முகாம்களுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.


லிபியாவில் கடந்த சில நாட்களாக இராணுவ மற்றும் அரச நிலைகள் மீது நேட்டோ படையினர் வான், மற்றும் தரைவழித் தாக்குதல்களை அதிகரித்துள்ளதை அடுத்து ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.


கடந்த மாதம் லிபிய அக்திகளை ஏற்றிச் சென்ற கப்பல் ஒன்று லிபியத் தலைநகர் திரிப்பொலிக்கு அருகே விபத்துக்குள்ளானதில் 16 பேர் உயிரிழந்தனர்.


மூலம்

[தொகு]