300 மாணவர்கள் பங்கேற்ற தமிழ் விக்கிப்பீடியா தொகுத்தல் பயிற்சி

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, சூலை 28, 2013

பங்கேற்பாளர்கள்

சென்னை கிறித்தவக்கல்லூரியில், தமிழியல் ஆய்வு மன்றத்தின் சார்பில் 26.07.2013, வெள்ளிக்கிழமை அன்று முற்பகல் 11 மணி அளவில், கலைப்புல அறை எண் 110 இல் தமிழ் விக்கிப்பீடியா தொகுத்தல் பயிற்சி நிகழ்ந்தது.

பங்கேற்பாளர்கள்

இந்நிகழ்வில், தமிழ்த்துறை இணைப்பேராசிரியர் ந. இளங்கோ வரவேற்புரை நிகழ்த்தினார். தமிழ்த்துறைப்பேராசிரியர் மற்றும் தலைவர் கு. அரசேந்திரன் தன் தலைமையுரையில் தமிழ்க்கணினியின் தேவை, தமிழ் விக்கிப்பீடியா தொகுத்தல் பணியின் தேவை குறித்தும் தமிழ் மாணவர்கள் இந்த அரிய வாய்ப்பை எப்படி பயன்படுத்திக்கொள்ள வேண்டுமெனவும் விளக்கினார்.

பெரியார் பல்கலைக்கழக இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறை துணைப்பேராசிரியர் மா. தமிழ்ப்பரிதி தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம், தமிழ் விக்கிப்பீடியா திட்டங்கள் மற்றும் தமிழ் விக்கிப்பீடியா தொகுத்தல் பணி, தமிழ்க்கணினி அறிமுகம், தமிழ்க்கணினியின் தேவை, தமிழ் இயங்கு தளங்கள், தமிழ் மென்பொருட்கள், தமிழ் எழுத்துரு, தமிழ் ஒருங்குகுறி, தமிழ் ஒருங்குகுறியின் பயன்கள், தமிழ் வலைப்பூ உருவாக்கம், திறந்தநிலை இயங்குதளங்கள் மற்றும் மென்பொருட்கள், ஒலிக்கோப்பு, ஒளிப்படங்கள், காணொளிகளின் பயன்பாடுகள் மற்றும் அவற்றை விக்கிப்பீடியா திட்டங்களில் இணைக்கும் முறைகள் ஆகிய பொருண்மைகளில் சிறப்புரை நிகழ்த்தி செய்முறைப் பயிற்சி அளித்தார். மாணவி கவிதா நன்றியுரை வழங்கினார்.


நிகழ்வின் இறுதியில் மாணவர்களின் ஐயங்களுக்கு பேராசிரியர் மா. தமிழ்ப்பரிதி செய்முறை விளக்கமளித்தார். இந்நிகழ்வில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

படக்காட்சியகம்[தொகு]