உதகமண்டலம் எமரால்டு ஹைட்ஸ் மகளிர் கல்லூரியில் தமிழ்க்கணினி, விக்கிப்பீடியா பயிலரங்கம்

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், திசம்பர் 19, 2013

உதகமண்டலத்தில் உள்ள எமரால்டு ஹைட்ஸ் மகளிர் கல்லூரி,தமிழகம் வலைதளம் வலைதளத்துடன் இணைந்து நீலகிரி பகுதியைச் சார்ந்த பொதுமக்களுக்கும் பல்கலைக்கழக, கல்லூரி மாணவ,மாணவிகளுக்கும் தமிழ்க்கணினி, தமிழ் விக்கிப்பீடியா தொகுப்புப்பணிகளில் ஈடுபாட்டை ஏற்படுத்தவும் தமிழ் விக்கிப்பீடியாவின் திட்டங்களில் அனைவரும் பங்கேற்கும் வகையில் எளிய செய்முறை விளக்கம் அளிக்க வேண்டும் என்பதையும் நோக்கங்களாகக் கொண்டு எமரால்டு ஹைட் மகளிர் கல்லூரியில், 28.12.2013 அன்று 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை கல்லூரி கலையரங்கில் இப்பயிலரங்கத்தை நிகழ்த்த உள்ளது.

இப்பயிலரங்கில் எமரால்டு ஹைட்ஸ் மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறையைச் சார்ந்த இணைப் பேராசிரியர். பிரசில்லா வரவேற்புரை வழங்க உள்ளார். எமரால்டு ஹைட்ஸ் மகளிர் கல்லூரி முதல்வர் முனைவர். செல்வநாயகி வாழ்த்துரை வழங்க உள்ளார்.

இப்பயிலரங்கில் பெரியார் பல்கலைக்கழக இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறை பேராசிரியர். மா. தமிழ்ப்பரிதி  சிறப்புரை ஆற்றி, தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம், தமிழ் விக்கிப்பீடியா திட்டங்கள், தமிழ் விக்கிப்பீடியா தொகுத்தல் பணி, தமிழ்க்கணினி அறிமுகம், தமிழ்க்கணினியின் தேவை, தமிழ் இயங்கு தளங்கள், தமிழ் மென்பொருள்கள், தமிழ் எழுத்துரு, தமிழ் ஒருங்குகுறி, தமிழ் ஒருங்குகுறியின் பயன்கள், தமிழ் வலைப்பூ உருவாக்கம், திறந்தநிலை இயங்குதளங்கள் மற்றும் மென்பொருள்கள், ஒலிக்கோப்பு, ஒளிப்படங்கள், காணொளிகளின் பயன்பாடுகள் மற்றும் அவற்றை விக்கிப்பீடியா திட்டங்களில் இணைக்கும் முறைகள் குறித்த நேரிடை செயல்முறைப் பயிற்சி அளிக்க உள்ளார்.எமரால்டு ஹைட்ஸ் மகளிர் கல்லூரியின் தலைமை நிருவாக அலுவலர் திருமதி சுபத்திரா இப்பயிலரங்கில் நிறைவுரையும் நன்றியுரையும் வழங்க உள்ளார்

எமரால்டு ஹைட்ஸ் மகளிர் கல்லூரி இந்தப் பயிலரங்கினை ஒருங்கிணைக்க உள்ளது. இப்பயிலரங்கம் மகளிருக்கு கணித்தமிழ் பயிற்சி, விக்கிப்பீடியா பயிற்சி அளிக்க வேண்டும் என்பதை முதன்மை நோக்காகக் கொண்டுள்ளது.

கல்லூரி முகவரி: எமரால்டு ஹைட்ஸ் மகளிர் கல்லூரி, பிங்கர் போஸ்ட், உதகமண்டலம்-643006.

இப்பயிலரங்கில் பங்கேற்க விரும்புபவர்கள் தங்களின் பெயரை தமிழகம் வலைதளம்அல்லது tparithi@gmail.com என்னும் மின்னஞ்சல் அல்லது +91-9750933101, +91-9655502241 ஆகிய இரு தொடர்பு எண்களில் பதிவு செய்து, பயிலரங்கில் பங்கேற்கலாம்.இப்பயிலரங்கிற்கில் பங்கேற்க பெயர்ப்பதிவு செய்பவர்களில் மகளிருக்கு முன்னுரிமை அளிக்கப்பெறும்.