உள்ளடக்கத்துக்குச் செல்

இந்தோனேசியாவில் கடலுக்கடியில் 7.1 அளவு நிலநடுக்கம்

Checked
விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், திசம்பர் 10, 2015

இந்தோனேசியாவின் கிழக்கே நேற்று புதன்கிழமை ரிக்டர் அளவில் 7.1 நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க நிலவியல் ஆய்வுமையம் அறிவித்தது.


இந்நிலநடுக்கம் இந்தோனேசியாவின் கிழக்கே சுமார் 174 கிலோமீட்டர் (108 மைல்) தொலைவிலுள்ள பந்தா, அம்பொன் தீவுப் பகுதியில் கடலடியில் 75 கிலோமீட்டர் (47 மைல்) ஆழத்தில் நிகழ்ந்தது.


இந்நிலநடுக்கத்தின்போது அப்பிராந்தியத்தின் கட்டிடங்கள் குலுங்கியதால் பெரும்பாலான மக்கள் பீதியடைந்தனர், எனினும் தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பு ஆழிப்பேரலை (சுனாமி) எச்சரிக்கை ஏதும் விடப்படவில்லை, அதேவேளையில் இந்நிலநடுக்கத்தால் எவ்வொரு பாதிப்பும் இல்லையென்பதே மூலத்தகவலாக அறியப்பட்டது.


இந்தோனேசியா பசிபிக் எரிமலை வளையத்தில் காணப்படுவதால் இங்கு நிலநடுக்கங்கள் அடிக்கடி நிகழ்கின்றன.


மூலம்

[தொகு]