உள்ளடக்கத்துக்குச் செல்

பிஎசுஎல்வி ஏவுகலம் சிங்கப்பூரின் 6 செயற்கைக் கோள்களை ஏவியது

Checked
விக்கிசெய்தி இலிருந்து

{வானியல்}}புதன், திசம்பர் 16, 2015

இந்தியாவின் முனைய துணைக்கோள் ஏவுகலம் (பிஎசுஎல்வி) மூலம் சிங்கப்பூரின் ஆறு செயற்கைக் கோள்கள் ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஸ் தவான் விண்வெளி மையத்திலிருந்து டிசம்பர் 16, இந்திய நேரம் மாலை 6.22க்கு ஏவப்பட்டது.


சதீஸ் தவான் விண்வெளி மையத்திலிருந்து ஏவப்படும் ஐம்பதாவது ஏவுதல் இதுவாகும். இது பிஎசுஎல்வியின் முப்பத்திரண்டாவது பறப்பாகும்.


ஏவுகலம் 226 டன் எடையும் 44 மீட்டர் உயரமும் உடையதாக இருந்தது. 400 கிகி எடையுடைய TeLEOS 1 என்னும் புவி உணர்வு செயற்கைக் கோளே, செலுத்தப்பட்ட செயற்கைக் கோள்களில் மிகப்பெரியதாகும். இது சிங்கப்பூரின் ST Electronics மூலம் உருவாக்கப்பட்டது. இதன் ஆயுள் ஐந்து ஆண்டுகள் ஆக வடிவமைக்கப்பட்டது. இதிலுள்ள கேமரா மூலம் புவியில் ஒரு மீட்டர் அளவிலுள்ள பொருட்களை பார்க்கமுடியும்.


மற்ற செயற்கைக் கோள்களான VELOX-CI, a123 கிகி எடையுடையதாகும். Kent Ridge 1, 78-கிகி எடையுடையதாகும், இதை உருவாக்கியது சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகமாகும். VELOX-II, 13-கிகி எடையுடையதாகும், இதை உருவாக்கியது சிங்கப்பூரின் நான்யாங் தொழினுட்ப பல்கலைக்கழகமாகும். Athenoxat 1 சிங்கப்பூரிலுள்ள தன் ஆய்வகத்தில் மைக்ரோபேசு நிறுவனம் உருவாக்கியது. Galassia இரண்டு அலகுடைய 3.4-கிகி எடையுடையதாகும், இதை உருவாக்கியது சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகமாகும்.



மூலம்

[தொகு]