உள்ளடக்கத்துக்குச் செல்

பாக்கித்தானில் காவலர் பயிற்சி கல்லூரியை மூன்று தற்கொலை தாரிகள் தாக்கியதில் பலர் பலி

Checked
விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், அக்டோபர் 25, 2016

பாகித்தானில் பலுசித்தான் மாகாண தலைநகரான குவெட்டா நகரிலுள்ள காவலர் பயிற்சி கல்லூரியை மூன்று தற்கொலை தாரிகள் தாக்கியதில் 50இக்கும் மேற்பட்டோர் பலியாயினர். கிட்டத்தட்ட 200 பயிற்சி காவலர்கள் காயமுற்றனர்.


நூற்றுக்கணக்கான பயிற்சியர் தங்கியிருந்த இந்த காவலர் பயிற்சி கல்லூரியின் விடுதியின் உள்ளே நுழைந்த தாக்குதல்தாரிகள் அங்கிருந்த பலரை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்தனர். இச்செய்தியறிந்த அரசுத் துருப்புக்கள் அங்கு விரைந்து ஒரு துப்பாக்கிதாரியை சுட்டுக் கொன்றனர்.


அண்டை நாடான ஆப்கானிந்தானில் இருந்து இந்த தாக்குதல்தாரிகள் இயக்கப்பட்டு இருக்கலாம் என்று தான் நம்புவுதாக, ஒரு மூத்த பாதுகாப்பு அதிகாரி கருத்து தெரிவித்தார்.


இசுலாமிய நாடு எனப்படும் அமைப்பை சேர்ந்தவர்கள் தாங்கள் தான் இத்தாக்குதலை நடத்தியதாகக் கூறினர். எனினும் அரசு அதிகாரிகள் லக்சர் இ சாங்வி அமைப்பை சேர்ந்தவர்கள் தான் இத்தாக்குதலை நடத்தியிறுக்க வேண்டும் என ஐயுறுகின்றனர்.


அனைத்து ஆயுததாரிகளும் கொல்லப்பட்டுவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இருவர் தற்கொலை அங்கிகளை வெடிக்கச்செய்து இறந்தனர், மூன்றாமவர் பாதுகாலர்கள் சுட்டதால் இறந்தார். இங்கு 600 பேர் தங்கி படிப்பதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர். 2008ஆம் ஆண்டும் இக்கல்லூரி தாக்கப்பட்டது.


மூலம்

[தொகு]