பள்ளிவாசல் தாக்குதலை தொடர்ந்து பாக்கித்தான் 100இக்கும் மேற்பட்ட தீவிரவாதிகளை கொன்றது

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, பெப்பிரவரி 17, 2017

வியாழக்கிழமை சிந்து மாகாணத்திலுள்ள பள்ளிவாசல் தற்கொலை தாக்குதலில் 80இக்கும் மேற்பட்டோர் பலியானதை தொடர்ந்து அடுத்த நாள் பாக்கித்தான் நடத்திய தாக்குதலில் 100இக்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.


பாக்கித்தானின் சிந்து மாகாணத்தில் செவான் நகரிலுள்ள புகழ்பெற்ற சுபி அறிஞர் லால் இச்சபாச் குலான்டர் புதைக்கப்பட்ட தர்காவிலேயே இத்தற்கொலை தாக்குதல் நடந்தது.


இசுலாமிய அரசு என்னும் அமைப்பு இத்தாக்குதலை தாங்கள் தான் நடத்தியதாக கூறியது.


18 தீவிரவாதிகள் சிந்து மாகாணத்திலும் 13 தீவிரவாதிகள் வட மேற்கு மாகாணத்திலும் கொல்லப்பட்டனர்.பஞ்சாப் மாகாணத்திலும் தீவிரவாதிகளின் மேல் தாக்குதல் நடத்தப்பட்டது. மற்றவர்கள் எங்கு கொல்லப்பட்டார்கள் என்றும் எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள் எனவும் உறுதியாக தெரியவில்லை.


ஆப்கானிசுத்தான் பாக்கித்தான் எல்லை மூடப்பட்டு ஆப்கானித்தானின் இரு மாகாணங்கள் ஏவுகணைகள் மூலம் தாக்கப்பட்டன. இத்தாக்குதலை பாக்கித்தான் அதிபரும் ஆப்கானித்தான் அதிபரும் கண்டித்துள்ளார்கள்.


சிந்து மாகாண அரசு தர்காவில் இறந்தவர்களுக்காக மூன்று நாட்கள் துக்கம் கடைபிடிக்கிறது. பக்தர்கள் வெள்ளிக்கிழமையும் தர்காவுக்கு அதிகம் வருகை புரிந்தனர். நக்காரா எனப்படும் மேள சத்தத்தை ஒலித்தும் அந்த இசைக்கு ஏற்ப ஆடும் தமால் எனப்படும் புனித ஆட்டமும் மாலை நடைபெற்றது.


இத்தர்கா 1356 ஆம் ஆண்டு சையது முகமது உசுமான் மார்வான்டி என்பரால் கட்டப்பட்டது

மூலம்[தொகு]