சிலோவாக்கியாவில் புதிய மொழிச் சட்டத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
செவ்வாய், செப்டம்பர் 1, 2009, சிலோவாக்கியா:
சிலோவாக்கியாவில் சிறுபான்மை மொழிகளை பயன்படுத்துவது குறித்து கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கவும், அப்படி பயன்படுத்தினால் கடுமையான அபராதம் விதிக்கவும் வழி செய்யும் சர்ச்சைக்குரிய ஒரு புதிய சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.
இதையடுத்து அங்குள்ள அங்கேரிய இனத்தவர்கள் ஆயிரக்கணக்கில் புதிய மொழிச் சட்டத்துக்கெதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் புதிய மொழிச் சட்டத்தின் மூலம் அங்கு பொது நிர்வாகத்திலும், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளிலும் ஸ்லோவாக் மொழியை பயன்படுத்தும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நாட்டின் சிறுபான்மையினர் இருபது சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கும் இடங்களில் மட்டுமே மற்ற மொழிகளை பயன்படுத்த முடியும் என்றும் அந்த சட்டம் கூறுகிறது.
சிலோவாக்கியாவில் சுமார் பத்து சதவீதம் அளவுக்கு பூர்வகுடி ஹங்கேரியர்கள் வாழ்ந்து வருகிறார்கள். இந்தச் சட்டமானது சர்வதேச உடன்பாடுகளுக்கு விரோதமானது என்றும் இது அச்ச உணர்வை தூண்டும் ஒரு நிலையை ஏற்படுத்தும் என்றும் ஹங்கேரிய அரசாங்கம் தெரிவிக்கிறது.
மூலம்