போர்த்துக்கல் தேர்தலில் ஆளும் சோசலிஸ்டுகள் தோல்வி

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், சூன் 6, 2011

போர்த்துக்கலில் இடம்பெற்ற பொதுத்தேர்தலில் ஆளும் சோசலிஸ்ட் கட்சி தோல்வி அடைந்ததை அடுத்து அதன் தலைவர் ஒசே சோக்கிரட்டெசு தனது பதவியில் இருந்து விலகினார்.


பெத்ரோ பாசோசு கோவெலோ தலைமையிலான சமூக மக்களாட்சிவாதிகள் 38.6 வீத வாக்குகளைப் பெற்று முதலாவதாக வந்தது. இவர்கள் 11.7 வீத வாக்குகளைப் பெற்ற பழமைவாதிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சோசலிஸ்டுகள் 28 வீத வாக்குகளைப் பெற்றனர்.


"இந்தத் தோல்வி முழுவதும் எனதே. இத்தோல்விக்கு நான் பொறுப்பெடுக்கிறேன்," என திரு. சோக்கிராட்டெசு தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றுகையில் கூறினார்.


கடந்த மார்ச் மாதத்தில் சோசலிச அரசு கவிழ்ந்ததை அடுத்து போர்த்துக்கல் யூரோ வலயத்தில் கிரேக்கம், அயர்லாந்து நாடுகளுடன் மூன்றாவது நாடாக பொருளாதார மீளமைப்புக்கு உதவி கோரியது. கடந்த மூன்று தசாப்த காலமாக நாட்டில் பெரும் வேலையில்லாத் திண்டாட்டம் நிலவி வருகிறது.


மூலம்[தொகு]