உள்ளடக்கத்துக்குச் செல்

அணிசேரா இயக்கத்தின் 15வது உச்சி மாநாடு நிறைவடைந்தது

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், சூலை 16, 2009 ஷார்ம் ஏல் ஷெய்க், எகிப்து:


அணிசாரா இயக்கத்தின் 15வது உச்சி மாநாடு, ஜூலை 16ம் நாள், எகிப்தின் ஷார்ம் ஏல் ஷெய்க் நகரில் நிறைவடைந்தது. புதிய நிலைமையில் இந்த இயக்கம் பல்வேறு வளரும் நாடுகளின் நலன்களைத் தொடர்ந்து பிரதிநிதித்துவப்படுத்தி, பன்னாட்டு சமூகத்தில் தனிச்சிறந்த பங்காற்ற வேண்டும் என்று வளரும் நாடுகள் விரும்புவதை இம்மாநாட்டில் விவாதிக்கப்பட்ட பல்வேறு பிரச்சினைகள், கடைசியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆவணங்கள் ஆகியவை காட்டுகின்றன.


2 நாட்கள் நீடித்த இம்மாநாட்டில் கலந்து கொண்ட 100க்கு மேலான நாடுகளின் தலைவர்கள் அல்லது பிரதிநிதிகள், உலக ஒற்றுமை, அமைதியான வளர்ச்சி என்ற தலைப்பில், கருத்துக்களை முழுமையாகப் பரிமாறிக் கொண்டனர். அணிசாரா இயக்கத்தின் வளர்ச்சித் திசை, எதிர்கால வாய்ப்பு ஆகியவை பற்றியும், மத்திய கிழக்கு, சர்வதேச நிதி நெருக்கடி உள்ளிட்ட சர்வதேச மற்றும் பிரதேச புதிய சிக்கலான பிரச்சினைகள் பற்றியும், அவர்கள் முக்கியமாக விவாதித்தனர். கடைசியில் பொது கருத்தை எட்டி, பல ஆக்கப்பூர்வ சாதனைகளைப் பெற்றனர்.


தலைவர்களின் உரை மற்றும் விவாதத்திற்குப் பின், இம்மாநாட்டில், ஷார்ம் ஏல் ஷெய்க் அறிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது. அடுத்த மூன்று ஆண்டுகளில் அணி சாரா நாடுகள் இயக்கத்தின் வளர்ச்சித் திசை மற்றும் செயல் பணித்திட்டங்கள், இதில் விளக்கி கூறப்பட்டன. அணு ஆயுதமற்ற உலகத்தை உருவாக்க, அணி சாரா நாடுகள் இயக்கம், தொடர்ந்து பாடுபட்டு, சர்வதேசப் பாதுகாப்பு மற்றும் நிதானத்தை விரைவுபடுத்தி வருகிறது. சர்வதேசப் பொருளாதாரம் மற்றும் நிதி அமைப்பு முறையைச் சீர்திருத்தி, சர்வதேசப் பொருளாதாரம் பற்றிய தீர்மானம் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களில் வளரும் நாடுகளின் கருத்து வெளியிடும் உரிமையை வலுப்படுத்தப் பாடுபடும். ஐ.நா சாசனம் மற்றும் தொடர்புடைய சர்வதேசத் தீர்மானத்தைப் பின்பற்றிப்பதை, முன்நிபந்தனையாகக் கொண்டு, வேறுபட்ட வடிவங்களில் பயங்கரவாதத்தை ஒற்றுமையாக எதிர்ப்பதாக அறிக்கை கூறியது. அதே வேளையில், இந்தப் பிரச்சினையைக் கையாள்வதில், அணி சாரா நாடுகளின் நிலைப்பாடு மற்றும் கருத்துக்களை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று இது வலியுறுத்தியது.


வளரும் நாடுகளைப் பொறுத்த வரை, அணி சாரா நாடுகள் இயக்கம், ஐ.நாவைத் தவிர்த்து, தற்போதைய மிக முக்கிய உலக ரீதியான சர்வதேச நிறுவனமாகும். சர்வதேசச் சமூகத்தின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி, அச்சுறுத்தல்கள் மற்றும் அறைகூவல்களை எதிர்நோக்கும் போது, இவ்வியக்கத்தின் சீரான வளர்ச்சி, மிகப்பல வளரும் நாடுகளுக்கு இடையிலான நிலைப்பாடுகளை ஒருங்கிணைத்து, ஒன்றுப்படலாம். பல்வேறு அறைகூவல்கள் மற்றும் அச்சுறுத்தல்களைக் கூட்டாகச் சமாளிப்பதற்கு இது துணை புரியும். இதன் விளைவாக, வளரும் நாடுகளின் நலன்கள் பேணிக்காக்கப்படும் என்று ஆய்வாளர்கள் கூறினர்.


தற்போது, உலகில் சில அடிப்படை மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. சர்வதேசச் சமூகத்தின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி, பல அச்சுறுத்தல்கள் மற்றும் அறைகூவல்களை எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றன. இந்த இக்கட்டான காலத்தில், இம்மாநாட்டை நடத்தியுள்ளது, முன்னெப்பொழுதும் இல்லாத முக்கியத்துவம் பெற்றிருக்கிறது என்று ஐ.நா தலைமைச் செயலாளர் பான் கி மூன் மாநாட்டில் சுட்டிக்காட்டினார்.


அணிசாரா நாடுகள் இயக்கத்தின் உயிராற்றல், சர்வதேசத்தில் அதன் முக்கிய தகுநிலை, அது கடைப்பிடிக்கும் கோட்பாட்டின் முக்கியத்துவம் ஆகியவற்றை, இம்மாநாடு மீண்டும் கோடிட்டுக்காட்டியது. மேலும் இன்பமான மற்றும் மேலும் பாதுகாப்பான, நியாயமான உலகத்தைத் தேடும் அணி சாரா நாடுகளிலுள்ள அனைத்து மக்களின் விருப்பத்தையும் இது வெளிப்படுத்தியது என்று அணி சாரா நாடுகள் இயக்கத்தின் நடப்புத் தலைவரும், எகிப்து அரசுத் தலைவருமான மொஹம்மெத் முபாரக்கும் சுட்டிக்காட்டினார்.

மூலம்

[தொகு]