அனைத்துலக நாணய நிதியத்தின் தலைவர் மோசடி புகாரில் வழக்கை எதிர்கொள்கிறார்

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, திசம்பர் 13, 2024


அனைத்துலக நாணய நிதியத்தின் தலைவர் கிறிசுடைன் லாகர்டே பிரேஞ்சு நிதியமைச்சராக இருந்த போது நடந்த மோசடி புகார் காரணமாக பிரான்சில் வழக்கை எதிர்கொள்கிறார்.


கிறிசுனைன் லகார்மடேவை அனைத்துலக நாணய நிதியம் இவ்வழக்கில் ஆதரிக்கிறது.


1990ஆம் ஆண்டு வணிகர் பெர்னார்டு டாப்பி பிரான்சின் சோசலிச அரசில் அமைச்சராவதற்காக நிறுவனங்களிலுள்ள தன் பங்குகளை 320 ஈரோ மில்லியன் மதிப்புக்கு விற்றுவிட்டார்


அடிடாசு என்ற விளையாட்டு கருவிகள் தயாரிக்கும் நிறுவனத்தின் பங்குகளை அரசு வங்கி கிரேடிட் லியோனிசு 320 மில்லியன் ஈரோவுக்கு 1993இல் வாங்கியது. பின்பு அதை 560 மில்லியன் ஈரோவுக்கு விற்றது. தாப்பி அடிடாசு நிறுவனத்தை குறைத்து மதிப்பிட்டு வங்கி தன்னை மோசம் செய்து விட்டதாக குற்றம் சாட்டினார்.


வங்கியின் மேல் வழக்கு தொடர்ந்தார். 2007இல் அவருக்கும் வங்கிக்கும் தொடக்க தீர்வு ஏற்பட பங்காற்றினார். அப்போது அவர் நிதி அமைச்சராக இருந்தார்.


2008இல் மூன்று நபர் அமர்வு தாப்பிக்கு 404 மில்லியன் ஈரோ கொடுக்கவேண்டும் என்றது. அதை லாகர்டே எதிர்த்து வழக்காடமல் அத்தீர்ப்பை ஏற்றுக்கொண்டார். இதனால் லகார்டே மீது குற்றச்சாட்டு எழுந்தது. 2011இல் சில சோசலிசுட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் லகார்மடே மீது ஊழல் புரிந்ததாக வழக்கு தொடர்ந்தார்கள்.


2014இல் பிரான்சின் மிகப்பெரிய நீதிமன்றம் இவர் மீது சுமத்தப்பட்டிருந்த கடுமையான குற்றச்சாட்டுகளை நீக்கி விட்டாலும் இவர் மூவர் அமர்வு தீர்ப்பாய வழக்கில் தன் கடமையை சரிவர நிறைவேற்றாமல் இருந்தார் என்றது. இந்த சொல் தற்போதைய வழக்கிற்கு இது அடிகோலியது.


இவ்வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கும் படி இவர் அளித்த முறையீட்டு மனுவை டிசம்பரில் நீதிமன்றம் தள்ளுபடி செய்து இவர் வழக்கில் நேரில் தோன்ற வேண்டும் என்றது.


மூலம்[தொகு]