அப்துல்கலாம் இயற்கை எய்தினார்

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், சூலை 27, 2015

சூலை 27, 2015-ல், அவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் பொதுவாக டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம், இந்தியாவின் மேகாலயா மாநிலத்தலைநகரான ஷில்லாங்கில் மாணவர்களிடையே உரையாற்றுகையில், மயங்கி விழுந்தார். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி காலமானார். கலாம் தமிழ்நாட்டில் உள்ள இராமேசுவரம் என்ற இடத்தில் பிறந்து வளர்ந்தார். திருச்சியில் உள்ள புனித ஜோசப் கல்லூரியில் இயற்பியலும் மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரியில் விண்வெளி பொறியியலும் படித்தார்.

80வது வயதில் அப்துல் கலாம்

11வது இந்திய ஜனாதிபதியாக பதவியை ஏற்கும் முன், அவர் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திலும் (DRDO) இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திலும், (ISRO) விண்வெளி பொறியாளராக பணியாற்றினார். ஏவுகணை மற்றும் ஏவுகணை ஏவல் வாகன தொழில்நுட்ப வளர்ச்சியில் கலாமின் ஈடுபாட்டினால் அவர் இந்திய ஏவுகணை நாயகன் என்று பிரபலமாக அறியப்படுகிறார்.