உள்ளடக்கத்துக்குச் செல்

அமெரிக்க செய்தியாளர் வால்ட்டர் குரோங்க்கைட் 92 அகவையில் இறந்தார்

விக்கிசெய்தி இலிருந்து
2006 இல் வால்ட்டர் குரொங்கைட்

சனி, சூலை 18, 2009


அமெரிக்கத் தொலைக்காட்சி செய்தியாளர் வால்ட்டர் குரோங்க்கைட் (Walter Cronkite), தமது 92 அகவையில் இறந்துவிட்டார். இவர் நெடுநாட்களாக மூளை-இரத்தக்குழாய் நோய் வாய்ப்பட்டு போராடிக்கொண்டிருந்தார்.


இவர் 1962 முதல் 1981 வரை CBS எனப்படும் தொலைக்காட்சி நிறுவன மாலைச் செய்திகள் (Evening News) வாசிப்பவராக இருந்தார். இப்பொறுப்பில் இருந்தபொழுது சான் எஃவ். கென்னடி சுட்டுக்கொலை செய்த செய்தியை 1963 இல் அறிவித்தார், 1969 இல் விண்வெளிக் கலம் அப்போலோ நிலாவில் இறங்கியதையும் அறிவித்தார். 1974 இல் அமெரிக்கக் குடியரசுத் தலைவர் நிக்சன் வாட்டர் கேட் நிகழ்வால் பதவி விலக் நேர்ந்தபொழுது அதனை அறிவித்தார். தொகுப்பாசியாராக இருந்தபொழுது வியட்நாம் போரைப் பற்றிக் கடுமையாக விமர்சனம் செய்தார்.


குரோங்க்கைட்டின் செய்தியாளர் வாழ்க்கை 1930களில் டெக்சாசில் உள்ள உஃகூசுட்டனில் வானொலி நிலையத்தில் தொடங்கியது. 1939 இல் இரண்டாவது உலகப்போர் செய்தியாளராக இருந்தார். நூரெம்பர்க் போர்க்குற்றங்கள் தீர்ப்பாயத்தின் நிகழ்வுகளை செய்தியாளர்ராக அறிவித்தார். CBS நிறுவனத்தின் நிலைத்த மாலைச் செய்தியாளராக இருந்ததால் ஆங்கிலத்தில் "news anchor" ("நங்கூரச் செய்தியாளர்") என்னும் சொல்லாட்சி த்ஹோன்றியதாகக் கூட கூறுவர்.


குரோங்க்கைட் தனி வாழ்வில் பாய்மரப் படகு ஒட்டும் ஆர்வலர். இவருக்கு மகள்கள் நான்சி (Nancy) கேத்தி (Kathy) ஆகிய இருவரும் மகன் வால்ட்டர் III என்பவரும் உள்ளனர்.

மூலம்

[தொகு]