உள்ளடக்கத்துக்குச் செல்

ஆங் சான் சூ கீயின் பர்மிய எதிர்க்கட்சி கலைக்கப்பட்டது

விக்கிசெய்தி இலிருந்து

சனி, மே 8, 2010

நீண்ட காலமாக சிறையில் இருக்கும் பர்மாவின் எதிர்க்கட்சித் தலைவி ஆங் சான் சூ கீயின் மக்களாட்சிக்கு ஆதரவான கட்சி கலைக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


படிமம்:Burma 3 150.jpg
ஆங் சான் சூ கீ

கடந்த வியாழக்கிழமைக்கு முன்னர் அரசியல் கட்சிகளை மீள்பதிவு செய்யுமாறு இராணுவ ஆட்சியாளர்கள் விடுத்த அறிவுறுத்தல்களை சூ கியின் மக்களாட்சிக்கான தேசிய முன்னணி (NLD) நிறைவேற்றத் தவறியதையடுத்தே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


இராணுவ ஆட்சிக்கெதிரான பிரபல கிளர்ச்சியொன்றின் பின்னர் 1988 இல் அமைக்கப்பட்ட இக்கட்சி எதிர்வரும் பொதுத்தேர்தல்களில் பங்கெடுப்பதில்லை என ஏற்கனவே முடிவு செய்திருந்தது. 1990 ஆம் ஆண்டில் இடம்பெற்ற தேர்தலில் இக்கட்சி பெரும் வெற்றி பெற்றிருந்தது. ஆனாலும் அதற்கு அரசமைக்கும் சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை.


மீள்பதிவு செய்யத்தவறும் கட்சிகள் கலைக்கப்படும் என இராணுவ ஆட்சியாளர்கள் முன்னர் அறிவித்திருந்தனர்.


இராணுவ ஆட்சியாளரால் அறிமுகப்படுத்தப்பட்டிருந்த தேர்தல் சட்டங்கள் கடும் விமர்சனங்களுக்குள்ளாகியுள்ள நிலையில், கடந்த வியாழக்கிழமை நள்ளிரவு உத்தியோகபூர்வமாக சூகியின் கட்சி கலைக்கப்பட்டுள்ளது.

மூலம்[தொகு]