ஆப்கானித்தானில் தேர்தல் சர்ச்சைக்கு பின் ஏற்பட்ட சமரசத்தில் புதிய அதிபர் தேர்ந்தெடுப்பு

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, செப்டெம்பர் 21, 2014

ஆப்கானித்தானில் 2014 ஏப்ரல் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் மூன்று வேட்பாகளர்கள் போட்டியிட்டனர். அதில் அப்துல்லா முதலிடத்தை பிடித்தாலும் அதிபர் ஆவதற்கு தேவையான வாக்குகளை பெறாததால் இரண்டாவது இடத்தை பிடித்த அசுரப் கானியுடன் மீண்டும் யூன் தேர்தலை சந்தித்தார். அத்தேர்தலில் அசுரப் கானி 56% வாக்குகளை பெற்று வென்றதாக அறிவிக்கப்பட்டது. இது அப்துல்லா ஆதரவாளர்களை கொதிப்படையச் செய்தது. தேர்தலில் பெரும்முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி அப்துல்லா ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


2009ம் ஆண்டு அதிபர் தேர்தலில் அப்துல்லா இரண்டாவதாக வந்தார். அப்போது கர்சாய்க்கு ஆதரவாக தேர்தலில் பெரும்முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றம் சாட்டினார்.


2004 இல் அப்துல்லா அப்துல்லா

அப்துல்லா முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆவார். அசுரப் கானி முன்னாள் நிதியமைச்சர் ஆவார்.


ஆப்கானித்தான் தேர்தல் ஆணையர் யூன் மாதம் நடைபெற்ற தேர்தலில் பெரும் தவறுகள் நடைபெற்றதை ஒப்புக்கொண்டதுடன் ஐக்கிய நாடுகள் மேற்பார்வையில் தணிக்கை முறைகேடுகளை முழுவதும் தடுக்க முடியவில்லை என்றும் கூறினார்.


அப்துல்லாவிற்கும் அசுரப் கானிக்கும் நடைபெற்ற சமரச பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு ஏற்பட்டு அசுரப் கானி அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டது.


இருவருக்குமான உடன்படிக்கையின் படி கானி அதிகாரத்தை அப்துல்லாவுடன் பகிர்ந்து கொள்வார்.


அசுரப் கானி ஆப்கானின் பெரிய இனமான பசுத்தூன் இனத்தவராவார், அப்துல்லா இரண்டாவது பெரிய இனமான தாஜிக் இனத்தவராவார்.


அடுத்த வாரத்திற்குள் கானி பதவியேற்பார் என்று கர்சாயின் செய்திதொடர்பாளர் கூறினார்.


ஆப்கான் அரசமைப்பு சட்டப்படி இரண்டு முறைக்கு மேல் தொடர்ந்து ஒருவர் அதிபராக இருக்க முடியாது. ஏப்பிரல் மாதத்தில் இருந்து யார் அதிபராக வருவார்கள் என்று ஆப்கன் மக்களின் கேள்விக்கு இப்போது விடை தெரிந்துள்ளது.


மூலம்[தொகு]