உள்ளடக்கத்துக்குச் செல்

ஆப்பிரிக்காவின் நமீப் பாலைவனத்தில் உள்ள 'விசித்திர வளையங்களுக்கு' கறையான்களே காரணம்

விக்கிசெய்தி இலிருந்து

சனி, ஏப்பிரல் 20, 2013

தென்மேற்கு ஆப்பிரிக்காவின் நமீபியாவில் உள்ள நமீப் பாலைவனத்தில் காணப்படும் அதிசயமான வறண்ட வளையங்கள் மணல் வாழ் கறையான்களின் கைவேலை என்று அறிவியலாளர்கள் கருதுகின்றனர்.


நமீபியாவின் மரீன்பிலசு பள்ளத்தாக்கில் காணப்படும் விசித்திர வளையங்கள்

இந்த விசித்திர வளையங்கள் பல்லாண்டுப் புல்லினத்தின் காய்ந்த புள்ளிகளாகும். இவை மண்ணாக ஆங்கிலோவில் இருந்து தென்னாப்பிரிக்காவிற்கு படர்ந்ததன் ஆரம்பத்தினை கண்டு சூழல் மற்றும் தொன்ம ஊகங்களில் கவரப்படுகின்றவை. நீர் விநியோகம் மற்றும் விசித்திர வளையங்களின் வாழ்க்கைக்காக சுமார் 40 முறை ஆப்பிரிக்காவிற்கு பயணித்தப்பின் செருமனி நாட்டின் ஆம்பர்கு பல்கலைக்கழத்தின் அறிவியலாளர் நோபெர்ட்டு சூர்சென்சு (Norbert Jürgens) இதற்கு பின்புலமாக மண் கறையான்களே உள்ளன என முடிவுரைத்தார். அந்த மண் கறையானின் உயிரியல் பெயர் சம்மோடெருமசு அலோசெரசு (Psammotermes allocerus) ஆகும்.


அந்த விசித்திர வளையங்களில் உள்ள ஆயிரக்கணக்கான உயிரினங்களில் இந்த மண்கறையானே அனைத்து பகுதியிலும் படர்ந்து இருந்தது என அவர் மார்ச்சு 29 சயன்சு அறிவியலிதழில் வெளியிட்டுள்ளார்.


இக்கறையான்கள் வேர்களையும், புல்லினங்களையும் தின்று அற்புதமான மொட்டைத் தரையை பொறித்துள்ளது. சோதனையின் பொழுது அந்த மொட்டைத் தரை பிற இடங்களைக் காட்டிலும் ஈரப்பதம் மிகுதியானதாக உள்ளது. இந்த ஈரப்பதமானது இக்கறையான்களுக்கு மட்டுமல்லாமல் பிற புல்லினங்களுக்கும், உயிரினங்களுக்கும் வசதியாக இருக்கிறது. சொல்லப்போனால், உண்மையில் இக்கறையான்கள் பிற உயிரினங்களுடன் போட்டிப்போட்டு வென்று வருகிறது. இவ்வாறு சூழலியல் பொறியாளரான நோபெர்ட்டு சூர்சென்சு கூறினார்.

மூலம்

[தொகு]