இந்தியாவின் செவ்வாய்க் கோள் ஆய்வுக் கலம்
Jump to navigation
Jump to search
வியாழன், ஆகத்து 13, 2009, இந்தியா:
கடந்த ஆண்டில், சந்திரயான்-1 என்ற சந்திர மண்டல ஆய்வு விண்கலத்தை வெற்றிகரமாக செலுத்திய பின், இந்தியா செவ்வாய்க் கோளில் கவனம் செலுத்தத் துவங்கியது. திட்டப்படி, அடுத்த 6 ஆண்டுகளில், இந்தியா முதலாவது செவ்வாய்க் கிரக ஆய்வு விண்கலத்தை செலுத்தும் என்று இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் அறிவித்தது.
திட்டப்படி, 2013-2015ம் ஆண்டுகளில், இந்தியா முதலாவது செவ்வாய்க் கிரக ஆய்வுவின் கலத்தை செலுத்தும் என்று இந்திய விண் வெளி ஆய்வு நிறுவனத்தின் பொறுப்பாளர் மாதவன் நாயர் கூறினார்.
தற்போது, செவ்வாய்க் கிரக ஆய்வு திட்டம் பற்றிய ஆய்வுப் பணிகள் நிறைவேறியுள்ளன. இத்திட்டத்திற்கு 10 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்ய இந்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது என்றும் நாயர் கூறினார்.
தொடர்புள்ள செய்திகள்[தொகு]
- சந்திரயான்-1 விண்கலத்தின் உணர்வீ செயலிழப்பு
- செவ்வாய் கோளுக்கு மனிதர்களை அனுப்புவது தொடர்பான ஆரம்பக்கட்ட பரிசோதனை நிறைவு
மூலம்[தொகு]
- இந்தியாவின் செவ்வாய்க் கிரக ஆய்வுக் கலம், சீன வானொலி