இந்தியா 104 செயற்கை கோள்களை ஒரே சமயத்தில் ஏவியது

விக்கிசெய்தி இலிருந்து

புதன், பெப்பிரவரி 15, 2017

இந்தியா 104 செயற்கை கோள்களை ஒரே சமயத்தில் தன்னுடைய பிஎசுஎல்வி-37 ஏவுகலம் மூலம் விண்ணுக்கு ஏவியது இதற்கு முன் உருசியா 2014ஆம் ஆண்டு யூன் மாதம் 37 செயற்கை கோள்களை ஒரே சமயத்தில் ஏவியதே சாதனையாக இருந்தது.


கார்ட்டோசாட் எனப்படும் செயற்கை கோளை இந்தியா ஏவியதுடன் 103 செயற்கை கோள்களையும் அதனுடன் சேர்த்து ஏவியது. ஏவப்பட்டதில் மொத்தம் மூன்று இந்திய செயற்கை கோள்கள், 96 அமெரிக்க செயற்கை கோள்கள், தலா ஒரு செயற்கை கோள்கள் இசுரேல், நெதர்லாந்து, அமீரகம், கசகசுத்தான், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளை சேர்ந்தவை.


அமெரிக்காவினதும் மற்ற நாடுகள் உடையதும் மிகச்சிறிய செயற்கை கோள்கள்.ஏவப்பட்ட செயற்கை கோள்களில் பெரும்பாலானவை பிளேணட் என்ற அமெரிக்க நிறுவனத்தினுடையது.


பிஎசுஎல்வி ஏவுகலம் இந்திய நேரம் காலை 9.28 மணிக்கு சிறிகரிகோட்டாவின் சதீசு தவான் விண்வெளி தளத்திலிருந்து ஏவப்பட்டது. 1380 கிகி மொத்த எடையை செயற்கை கோள்கள் கொண்டிருந்தன.


மூலம்[தொகு]