இந்தோனேசியாவின் அரசுத்தலைவர் தேர்தலில் ஜோக்கோ விடோடோ வெற்றி

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், சூலை 22, 2014

இந்தோனேசியாவில் அண்மையில் நடைபெற்ற அரசுத்தலைவர் தேர்தலில் சகார்த்தா ஆளுநர் ஜோக்கோ விடோடோ வெற்றி பெற்றுள்ளார் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


ஜோக்கோவி எனப் பொதுவாக அழைக்கப்படும் ஜோகோ விடோடோ 53.15% வாக்குகளைப் பெற்றுள்ளார் என தேர்தல் ஆணையகம் அறிவித்துள்ளது. முன்னாள் இராணுவத் தளபதி பிரபோவோ சுபியான்டோ 46.85% வாக்குகளைப் பெற்றார்.


தேர்தலில் பல முறைகேடுகள் இடம்பெற்றதாகக் கூறிய பிரபோவோ சுபியான்டோ தேர்தல் முடிவுகளை எதிர்த்து முறையிடப்போவதாகத் தெரிவித்துள்ளார்.


இந்தோனேசியாவின் சர்வாதிகார ஆட்சிக்குத் தாம் முடிவு கட்டவிருப்பதாகத் தெரிவித்திருக்கும் ஜோகோவி, ஏழைகளின் சமூகப் பிரச்சினைகள் தீர்க்கப்படும் என உறுதி அளித்தார்.


மூலம்[தொகு]