உள்ளடக்கத்துக்குச் செல்

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் எரிமலை வெடிப்பு, பல்லாயிரக்கணக்கானோர் இடம்பெயர்வு

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, பெப்பிரவரி 14, 2014

இந்தோனேசியாவின் கிழக்கு சாவகத் தீவில் எரிமலை வெடித்ததில் பல்லாயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்து வருகின்றனர்.


2014 வெடிப்பு: தலைநகரை சாம்பல், தூசு சூழ்ந்தது.

கெலூட் எரிமலை வெடித்ததில் சாம்பலும், தூசியும் 130 கிமீ தூரத்தில் உள்ள தலைநகர் சுரபாயா வரை பரவியுள்ளது. இரண்டு வீடுகள் இடிந்து வீழ்ந்ததில் இருவர் கொல்லப்பட்டனர். சில நகரங்கள் 4 செமீ சாம்பலால் மூடப்பட்டுள்ளன.


மூன்று முக்கிய பன்னாட்டு விமான நிலையங்கள் விமானப் போக்குவரத்துக்காக மூடப்பட்டன. பல விமான சேவைகள் வேறு இடங்களுக்குத் திசை திருப்பப்பட்டுள்ளன.


இந்தோனேசியாவில் கிட்டத்தட்ட 130 செயல்நிலை எரிமலைகள் காணப்படுகின்றன. கெலூட் எரிமலை கடைசியாக 1990 ஆம் ஆண்டில் வெடித்தது. 1919 ஆம் ஆண்டில் வெடித்த போது 5,000 பேர் வரை உயிரிழந்தனர்.


மூலம்

[தொகு]