இந்தோனேசியாவின் பப்புவா மாகாணத்தை 7.2 அளவு நிலநடுக்கம் தாக்கியது
- 3 மார்ச்சு 2016: இந்தோனேசியா கடல் பகுதியில் நில நடுக்கம்
- 14 திசம்பர் 2015: இந்தோனேசியாவில் கடலுக்கடியில் 7.1 அளவு நிலநடுக்கம்
- 29 ஏப்பிரல் 2015: இத்தோனேசியாவில் எட்டு பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது
- 9 ஏப்பிரல் 2015: கிழக்கு திமோரில் செய்தியாளர்கள் கொலை தொடர்பில் ஆஸ்திரேலியா போர்க்குற்ற விசாரணை
- 28 திசம்பர் 2014: இந்தோனேசியாவின் ஏர்ஏசியா வானூர்தி இக்யு.இசட் 8501 162 பேருடன் மறைந்தது
ஞாயிறு, ஏப்பிரல் 7, 2013
இந்தோனேசியாவின் மேற்கு பப்புவா மாகாணத்தின் மலைப்பகுதியை 7.2 அளவு நிலநடுக்கம் நேற்று சனிக்கிழமை தாக்கியது. சேதங்களோ அல்லது உயிரிழப்புகளோ இதுவரை அறிவிக்கப்படவில்லை.
இரியன் ஜயா என முன்னர் அழைக்கப்பட்ட பப்புவா மாகாணத்தில் தொலிக்காரா என்ற இடத்தில் இருந்து 56 கிமீ தூரத்தில் மலைப் பகுதி ஒன்றில் 58 கிமீ ஆழத்தில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க நிலையல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இவ்வதிர்வு நிலத்தில் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
பப்புவா மாகாணத்தின் தலைநகர் ஜயப்புர உட்படப் பல பகுதிகளிலும் இந்நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. மக்கள் பலரும் அச்சத்தின் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறினர்.
பசிபிக் எரிமலை வளையத்தில் அமைந்திருக்கும் இந்தோனேசியத் தீவுகளில் நிலநடுக்கங்கள் அடிக்கடி இடம்பெறுகின்றன. 2004 ஆம் ஆண்டு நிலநடுக்கம் மற்றும் சுனாமியில் 230,000 பேர் உயிரிழந்தனர்.
மூலம்
[தொகு]- Indonesia Earthquake Reported At Magnitude 7.1, அஃப்டிங்டன் போஸ்ட், ஏப்ரல் 6, 2013
- Earthquake measuring 7.2 magnitude strikes eastern Indonesia: USGS, ராய்ட்டர்ஸ், ஏப்ரல் 6, 2013