உள்ளடக்கத்துக்குச் செல்

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு, ஐவர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

சனி, ஆகத்து 10, 2013

இந்தோனேசியாவின் மிகச் சிறிய தீவுகளில் ஒன்றான பாலு (Palue) தீவில் உள்ள எரிமலை வெடித்ததில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர்.


தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து 2,000 கிமீ கிழக்கே அமைந்துள்ள 4கிமீ அகலமான இந்த பாலு தீவில் உள்ள ரொக்கடெண்டா எரிமலை வெடித்ததில் அதிலிருந்து தூசுகளும், பாறைகளும் நூற்றுக்கணக்கான உயரத்திற்கு வானில் கிளம்பின. அண்மையில் உள்ள கடற்கரையை வெப்பத் தூசு மூடியதில் அங்கிருந்த இரண்டு சிறுவர்கள் உட்பட மூவர் உயிரிழந்தனர்.


இந்த எரிமலை கடந்த ஆண்டு இறுதியில் இருந்து சிறிது சிறிதாக சீறி வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் ஏற்கனவே பலர் இருப்பிடங்களை விட்டு வெளியேறியிருந்தனர். இறந்த ஐவரும் எவ்வாறு அங்கு சென்றனர் என்பது குறித்து அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.


இந்தோனேசியத் தீவுகள் பசிபிக் எரிமலை வளையத்தில் காணப்படுவதால் இங்கு நிலநடுக்கங்கள், எரிமலை வெடிப்புகள் அடிக்கடி நிகழ்கின்றன.


மூலம்[தொகு]