உள்ளடக்கத்துக்குச் செல்

இந்தோனேசியாவில் குடியிருப்புகளின் மீது விமானப்படை விமானம் வீழ்ந்ததில் 11 பேர் உயிரிழப்பு

Checked
விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, சூன் 22, 2012

இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் விமானப் படை விமானம் ஒன்று குடியிருப்பு மனைகள் மீது வீழ்ந்து நொறுங்கியதில் 11 பேர் கொல்லப்பட்டனர், குறைந்தது 35 பேர் காயமடைந்தனர்.


ஃபொக்கர் எஃப்-27 ரக விமானம்

ஃபொக்கர் எஃப்27 ரக விமானமே நேற்று வியாழன் அன்று ஹலீம் பெர்தனாக்சுமா விமான நிலையத்தில் தரையிறங்கும் போது வீழ்ந்து தீப்பற்றியதாக உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன.


விமானத்தில் பயணம் செய்த விமானப் படையைச் சேர்ந்த ஏழு பேரில் ஆறு பேர் உயிரிழந்ததாகவும், விமானம் வீழ்ந்த இடத்தில் இருந்த வீடொன்றில் ஒரு குழந்தை உட்பட நால்வர் உயிரிழந்தததாகவும் விமானப்படைப் பேச்சாளர் அஸ்மன் யூனுஸ் தெரிவித்தார். உயிர் தப்பிய விமானப் படை வீரர் பின்னர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.


56 பேர் பயணம் செய்யக்கூடிய டச்சுத் தயாரிப்பான ஃபொக்கர் எஃப் 27 ரக விமானங்கள் 1950களில் தயாரிக்கப்பட்டவை ஆகும்.


மூலம்

[தொகு]