இந்தோனேசியாவில் பாலம் வீழ்ந்ததில் 12 சிறுவர்கள் உயிரிழப்பு
செவ்வாய், சூன் 8, 2010
- 3 மார்ச்சு 2016: இந்தோனேசியா கடல் பகுதியில் நில நடுக்கம்
- 14 திசம்பர் 2015: இந்தோனேசியாவில் கடலுக்கடியில் 7.1 அளவு நிலநடுக்கம்
- 29 ஏப்பிரல் 2015: இத்தோனேசியாவில் எட்டு பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது
- 9 ஏப்பிரல் 2015: கிழக்கு திமோரில் செய்தியாளர்கள் கொலை தொடர்பில் ஆஸ்திரேலியா போர்க்குற்ற விசாரணை
- 28 திசம்பர் 2014: இந்தோனேசியாவின் ஏர்ஏசியா வானூர்தி இக்யு.இசட் 8501 162 பேருடன் மறைந்தது
இந்தோனேசியாவில் ஒரு தொங்கு பாலம் திடீரென்று சரிந்து விழுந்ததில் 12 சிறுவர்கள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தோனேசியாவின் அச்சே மாநிலத்தின் புறநகர் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் அந்த விபரீதம் நடந்ததாக அந்த அதிகாரி தெரிவித்தார்.
சுமார் 40 சிறுவர்கள் அந்த தொங்கு பாலத்தில் ஒன்று கூடியிருந்தபோது பாலம் சரிந்து விழுந்ததாகக் கூறப்பட்டது.
சிறுவர்கள் அனைவரும் ஆற்றில் விழுந்து விட்டதாகவும் அவர்களில் 25 பேர் காப்பாற்றப் பட்டதாகவும் அந்த அதிகாரி கூறினார். இவர்களில் 12 பேர் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இவர்கள் அனைவரும் 12 வயதுக்கும் குறைவானவர்கள் என்று தெரியவந்துள்ளது.
இப்பகுதியில் தொற்றுநோய் பரவுதலைத் தடுத்து துரதிர்ஷ்டத்தை போக்குவதற்காக இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஆற்றில் சில பொருள்களை பெரியவர்கள் வீசுவதை அந்த சிறார்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தபோது அந்த விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
மூலம்
[தொகு]- தொங்கு பாலம் சரிந்து விழுந்ததில் 12 இந்தோனீசிய சிறார்கள் பலி, தமிழ் முரசு, ஜூன் 8, 2010
- Bridge collapse kills 10 children in Indonesia, msnbc, ஜூன் 7, 2010
- 12 children dead in Indonesia bridge collapse, ஏபிசி, ஜூன் 7, 2010