உள்ளடக்கத்துக்குச் செல்

இந்தோனேசிய விமான விபத்தில் 27 பேர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

சனி, மே 7, 2011

இந்தோனேசியப் பயணிகள் விமானம் ஒன்று கடலில் வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த 27 பேரும் கொல்லப்பட்டனர் என கடற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


இந்தோனேசியாவில் மேற்கு பப்புவா மாகாணம்

இந்தோனேசியாவின் மேற்கு பப்புவா மாகாணத்தில் கைமானா என்ற சிறிய நகரை நோக்கிச் சென்று கொண்டிருக்கையில் சீரற்ற காலநிலை காரணமாக கடலில் வீழ்ந்தது. 15 பேரின் உடல்கள் இதுவரையில் மீட்கப்பட்டுள்ளன.


"விமானம் கடலில் வீழ்ந்து வெடித்ததில் அனைத்துப் பயணிகளும் கொல்லப்பட்டனர்," எனக் கடற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். "விமானம் சிறிய துண்டுகளாகச் சிதறின."


கடந்த சில ஆண்டுகளாக இந்தோனேசியாவில் பல சிறியரக விமானக்கள் விபத்துக்குள்ளாகியுள்ளன. 2007 ஆம் ஆண்டில் அந்நாட்டின் தேசிய விமான நிறுவனமான கருடா உட்பட அனைத்து விமானங்களுக்கும் ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்திருந்தது. ஆனாலும், கருடாவின் தடை 2009 ஆம் ஆண்டில் நீக்கப்பட்டது.


மூலம்[தொகு]