உள்ளடக்கத்துக்குச் செல்

இமாச்சலப் பிரதேசப் பழங்குடியினர் கிரேக்க மன்னன் அலெக்சாண்டரின் வாரிசுகளா?

விக்கிசெய்தி இலிருந்து
இந்திய வரைபடத்தில் இமாச்சலப் பிரதேசம்

ஞாயிறு, ஆகத்து 9, 2009, இந்தியா:


இந்தியாவின், இமாசல பிரதேசத்தில் வசிக்கும் பழங்குடி மக்கள், கிரேக்க மன்னன் அலெக்சாண்டரின் வாரிசுகளா என்பது குறித்து ஆய்வு நடந்து வருகிறது. ரோமானிய பேரரசை விரிவுப்படுத்திய மாவீரன் அலெக்சாண்டர் கி.மு.323-ம் ஆண்டில் 33 வது வயதில் இறந்தான்.


இவன் இந்தியாவின் மீது படையெடுத்து பியஸ் நதிக்கரை அருகே ஆட்சி செய்து வந்த போரஸ் மன்னனை வெற்றிக் கொண்டான். கிரேக்கத்திலிருந்து நீண்ட தூரம் பயணம் செய்து இந்தியா மீது போர் தொடுத்த கிரேக்க வீரர்கள் பலர் சோர்வடைந்தனர். சிலர் இந்தியாவிலேயே தங்கி விட்டனர். கிரேக்க சாம்ராச்சியம் அழிந்து பல நூறு ஆண்டுகள் ஓடிவிட்டன. ஆனால், தாங்கள் அலெக்சாண்டரின் வாரிசுகள் என கூறிக்கொண்டு இமாசல பிரதேச மாநிலம் மலானா என்ற பகுதியில் பழங்குடி மக்கள் வசிக்கின்றனர். இவர்கள் பேசும் மொழி மற்றவர்களுக்கு புரிவதில்லை.

மாவீரன் அலெக்சாண்டர் (கிமு 356 - கிமு 323)

இது குறித்து இமாசல பிரதேச பல்கலைக்கழகத்தின் பழங்குடியினர் பற்றிய பாடத்தின் துறை தலைவர் பி.கே.வைத் கூறியதாவது:-


இமாசல பிரதேசத்தில் மலானா கிராமம் 8,600 அடி உயரத்தில் உள்ளது. இங்குள்ள மக்கள் ரோமானியர்களை போன்ற முகம் மற்றும் உடலமைப்பை கொண்டவர்களாக உள்ளனர். மலானா கிராம மக்கள் பேசும் மொழி எந்த வகை என்று தெரியவில்லை. சுவீடன் நாட்டில் உப்சலா பல்கலைக்கழகம் 1477ம் ஆண்டில் துவக்கப்பட்ட மிக பழமையான பல்கலைக்கழகம். பல நாடுகளை சேர்ந்த புராதன பொருட்கள் மற்றும் ஆவணங்கள் இங்கு பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. மலானா மக்கள் அலெக்சாண்டரின் வாரிசுகள் என கூறி வருவதால், அவர்களது மொழிக்கும், அலெக்சாண்டர் காலத்தில் பேசப்பட்ட மொழிக்கும் ஒற்றுமை உள்ளதா, என ஆராயும்படி உப்சலா பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்களிடம் கேட்டுள்ளோம்.


எங்களுடன் சேர்ந்து அவர்களும் இது குறித்து ஆராய்ந்து வருகின்றனர். இந்த ஆய்வு முடிவின் பேரில் மலானா மக்கள் அலெக்சாண்டரின் வம்சத்தவர்களா என்பது தெரிந்து விடும் என்றார்.

மூலம்[தொகு]

  • தினமலர்