உள்ளடக்கத்துக்குச் செல்

இலங்கையில் நடந்த போர்க்குற்றங்களை விவரிக்கும் புதிய ஆவணத் திரைப்படம் வெளியாகவுள்ளது

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், பெப்பிரவரி 19, 2013

ஈழப்போரின்போது இலங்கையில் நிகழ்ந்த போர்க்குற்றங்களை விளக்கும் இன்னொரு ஆவணத் திரைப்படம் வெளியாகவுள்ளது. 'நோ ஃபயர் ஜோன்' (No Fire Zone) எனத் தலைப்பிடப்பட்டுள்ள இத்திரைப்படத்தை கேலம் மெக்கரே என்பவர் உருவாக்கியுள்ளார். எதிர்வரும் மார்ச்சு மாதத்தில் ஐநா மனித உரிமைகள் கூட்டத்தின்போது 'ஜெனீவா மனித உரிமைகள் திரைப்பட விழா'வில் இத்திரைப்படம் திரையிட்டுக் காட்டப்படும்.


ஐக்கிய இராச்சியத்திலிருந்து வெளியாகும் 'தி இண்டிபென்டன்ட்' நாளிதழில் கேலம் மெக்கரே எழுதியிருக்கும் கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது. விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்டது குறித்த அதிர்ச்சியான தகவல்கள் இக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளன. மேலும் அக்கட்டுரையில், "இராணுவத்தால் இளஞ்சிறுவன் கொல்லப்பட்டது குறித்த புகைப்படங்கள் இந்த ஆவணத் திரைப்படத்தில் சேர்க்கப்பட்டுள்ளது; இந்த ஆதாரங்கள் அனைத்தும் தடவியல் நிபுணர்களால் பரிசோதிக்கப்பட்டவை" எனவும் கேலம் மெக்கரே எழுதியுள்ளார்.

தொடர்புள்ள செய்திகள்

[தொகு]

மூலம்

[தொகு]