இலங்கை வவுனியா வடக்கில் மூன்றாம் கட்ட மீள்குடியேற்றம்

விக்கிசெய்தி இலிருந்து

புதன், சூலை 8, 2009 வவுனியா, இலங்கை

இலங்கையின் போரினால் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியமர்த்தும் வேலைத்திட்டத்தின் மூன்றாம் கட்டமாக (முதற்கட்டமாக மன்னார் சிலாவத்துறையிலும், இரண்டாம் கட்டமாக மன்னார் முசலியிலும் இடம்பெற்றிருந்தது.) வடக்கு மாகாணத்தின் வவுனியா வடக்கு உதவி அரச அதிபர் பிரிவிலுள்ள எட்டு கிராமங்களில் மக்களை மீளக்குடியமர்த்தும் நடவடிக்கைகள் சூலை மாதம் இரண்டாம் வாரம் தொடங்கவுள்ளதாக மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். போரின் போது புலிகளின் பிடியிலிருந்த வவுனியா வடக்கு பிரதேசத்தின் நெடுங்கேணி தெற்கு கிராம சேவகர் பிரிவிலுள்ள மருதன்குளம், புளியங்குளம் கிராம சேவகர் பிரிவிலுள்ள கலீமடு, புலியன் குளம், கனக ராயன் குளம், குஞ்சுகுளம், பரந்தன், நெடுஞ்கேணி, மன்னார் குளம் ஆகிய எட்டு கிராமங்களிலுள்ள மக்களே மீளக் குடியமர்த்தப்படவுள்ளனர்.

மூலம்[தொகு]