ஈரானில் மேற்குலகத் தலையீடு குறித்து கொமெய்னி எச்சரிக்கை

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

செவ்வாய், சூலை 7, 2009 ஈரான் தமது நாட்டின் உள்விவகாரங்களில் மேற்குலக நாடுகள் தலையிடுகின்றன என்றும், அவற்றுக்கு எதிராக தமது நாடு பதிலடி கொடுக்கும் என்றும் திங்கட்கிழமை ஈரானின் அதியுயர் மதத்தலைவர் அயொத்தொல்லா கொமெய்னி கடுமையாக எச்சரித்துள்ளார். ஜூன் 12, 2009 இல் நாட்டில் இடம்பெற்ற கலவரங்களுக்கு மேற்குலக நாடுகளே பொறுப்பு என்றும் அவர் சாடியுள்ளார். அதிலும் குறிப்பாக பிரிட்டனையும், அமெரிக்காவையும் இது தொடர்பில் ஈரான் விமர்சித்திருந்தது.

மூலம்[தொகு]