உகாண்டாவில் பழங்குடியினருடன் இடம்பெற்ற கலவரங்களில் பலர் இறப்பு

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search
LocationUganda.svg

வெள்ளி, செப்டம்பர் 11, 2009, கம்பாலா, உகாண்டா:


கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவின் தலைநகர் கம்பாலாவில் காவல்துறையினருக்கும், பழங்குடியின் மன்னர் ஒருவரின் ஆதரவாளர்களுக்கும் இடையில் இரண்டாவது நாளாக தொடரும் மோதல்களில் குறைந்தபட்சம் மேலும் மூவர் கொல்லப்பட்டனர்.


இரண்டு நாட்களாக மூடப்பட்டிருக்கும் அந்த நகரில் ஒழுங்கை நிலைநாட்ட அங்கு தமது துருப்பினரை நிறுத்தியுள்ளதாக இராணுவம் கூறுகிறது.


கம்பாலாவுக்கு அருகே உள்ள ஒரு பிராந்தியத்துக்கு, பகந்தா பழங்குடியினரின் மன்னர் செல்வதை தடுக்க அரசாங்கம் முயன்றதால் வெடித்த மோதல்களில் குறைந்தது வியாழனன்று குறைந்தது 7 பேர் கொல்லப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன.


பழங்குடியின தலைவர்களுடன் தாம் அவசர பேச்சுக்களை நடத்துவதாக அரசாங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.


ஆனால், வன்செயல்களுக்கு மத்தியிலும், தனது சர்ச்சைக்குரிய விஜயத்தை நாளை மன்னர் மேற்கொள்ளப்போவதாக, புகந்தா இராட்சியத்துக்கான பிரதமர் ஜே.பி. வலுசிம்பி பிபிசியிடம் தெரிவித்துள்ளார். மன்னரின் பாதுகாப்பை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுள்ளார்.

மூலம்[தொகு]