உள்ளடக்கத்துக்குச் செல்

ஊழல் புகாரை அடுத்து குவைத் அரசு பதவி விலகியது

விக்கிசெய்தி இலிருந்து
குவைத்தில் இருந்து ஏனைய செய்திகள்
குவைத்தின் அமைவிடம்

குவைத்தின் அமைவிடத்தைக் காட்டும் வரைபடம்

புதன், நவம்பர் 30, 2011

குவைத் நாட்டில் பிரதமர் மீது எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஊழல் புகார் கூறியதைத் தொடர்ந்து பிரதமர் ஷேக் நாசர் அல் முகமது அல் சபா தலைமையிலான அரசாங்கம் நேற்று பதவி விலகியது.


எண்ணெய் வளம் மிக்க நாடான குவைத் மன்னர் ஷேக் ஷபா அல் அகமது அல் சபா பரிந்துரையின்படி ஷேக் நாசர் அல் முகமது அல் சபா கடந்த 2006ம் ஆண்டு பிரதமரானார். இவரின் ஆட்சிக்காலத்தில் அரசாங்கப் பணத்தை வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி உள்ளதாக எதிர்க்கட்சி புகார் தெரிவித்து நேற்று முன்தினம் பிரமாண்ட பேரணி நடத்தினர்.


இதையடுத்து பிரச்சனை அதிகரிப்பதை உணர்ந்த மன்னர் ஷேக் சபா உயர் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து பிரதமர் நாசர் தலைமையிலான அரசாங்கத்தைப் பதவி விலகும் படி உத்தரவிட்டார். மன்னரின் உத்தரவுப்படி நாசர் தலைமையிலான அமைச்சரவை பதவி விலகியது. அவர்களது பதவி விலகலை மன்னர் ஏற்றுக் கொண்டார்.


புதிய அரசு பதவியேற்கும் வரையில் நாசர் பதவியில் இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


மூலம்[தொகு]