உள்ளடக்கத்துக்குச் செல்

எகிப்தில் இரு தொடருந்துகள் மோதியதில் 25 பேர் கொல்லப்பட்டனர்

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, அக்டோபர் 25, 2009


எகிப்தியத் தலைநகர் கைரோவில் இரண்டு பயணிகள் தொடருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டனர். 50 பேர் படுகாயமடைந்தனர்.


அசூட் நகரில் இருந்து புறப்பட்ட தொடருந்து பாயூம் நகரை நோக்கிச் சென்று கொண்டிருந்த வேறொரு தொடருந்தை பின்பக்கமாகச் சென்று மோதியதில் பல பெட்டிகள் நொறுங்கிச் சேதமடைந்தன.


பல பயணிகள் தலைகீழாகக் கவிழ்ந்த பெட்டிகளின் உள்ளே சிக்கிக் கொண்டுள்ளனர். அவர்களை மீட்கும் பணி தொடர்ந்த வண்ணம் உள்ளது.


எகிப்தில் இதற்கு முன்னரும் தொடருந்து விபத்துக்கள் பல இடம்பெற்றுள்ளன. 2002 ஆம் ஆண்டில் எகிப்தில் இடம்பெற்ற மோசமான தொடருந்து விபத்தில் தொடருந்து திப்பிடித்து எரிந்ததில் 370 பேர் கொல்லப்பட்டனர். ஆகஸ்ட் 2006 இல் கைரோவில் இடம்பெற்ற மற்றும் ஒரு விபத்தில் 50 பயணிகள் வரையில் கொல்லப்பட்டனர்.

மூலம்