எசுப்பானியா,போர்த்துகல் மற்றும் மொரோக்கோவில் நிலநடுக்கம்
Appearance
வியாழன், திசம்பர் 17, 2009
இன்று எசுப்பானியா, போர்த்துகல் மற்றும் மொரோக்கோ ஆகிய நாடுகளில் அதிகாலை உள்ளூர் நேரம் 2.37 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் மையப்பகுதி தெற்கு போர்த்துகல்லின் கேப் செயின்ட் வின்சென்ட் பகுதியிலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவில், அட்லாண்டிக் பெருங்கடலில் கடலுக்குள் 58 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது.எசுப்பானியா நாட்டின் பூகம்பவியல் கழகத்தின் பதிவுக் கருவியில் 6.3 ரிக்டராக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதனால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து உடனடியாக தெரியவரவில்லை.