உள்ளடக்கத்துக்குச் செல்

எயிட்டியில் ஐநா வானூர்தி வீழ்ந்து நொறுங்கியதில் 11 பேர் உயிரிழந்தனர்

விக்கிசெய்தி இலிருந்து

சனி, அக்டோபர் 10, 2009


ஐக்கிய நாடுகளுக்குச் சொந்தமான வானூர்தி ஒன்று கரிபியன் தீவான எயிட்டியில் வீழ்ந்து நொறுங்கியதில் அதில் பயணம் செய்த அனைத்து 11 பேரும் உயிரிழந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.


காசா சி-212 அவியோக்கார் என்ற வானூர்தி எயிட்டியின் தலைநகர் போர்ட்-ஓ-பிரின்சில் இருந்து 45 கிலோமீட்டர் தூரத்தில், டொமினிக்கன் குடியரசின் எல்லைக்கருகில் விபத்துக்குள்ளாகியது.


இறந்தோர் அனைவரினதும் உடல்களும் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அவர்கள் உருகுவாய் மற்றும் ஜோர்தானைச் சேர்ந்த இராணுவத்தினர் என ஐநா அறிவித்தது. இவரக்ள் அனைவரும் எயிட்டியில் நிலை கொண்டுள்ள 9,000 ஐநா அமைதி காக்கும் படையின் ஒரு பகுதி எனத் தெரிவிக்கப்படுகிறது. எயிட்டியில் இராணுவப் புரட்சி வெடித்ததைத் தொடர்ந்து ஐ.நா. அமைதிப் படை அங்கு நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இவர்கள் அங்கு 2004 ஆம் ஆண்டு முதல் இருந்து வருகிறார்கள்.


விபத்துக் குறித்த விசாரணைகளை ஐக்கிய நாடுகள் ஆரம்பித்துள்ளது.


மூலம்

[தொகு]