ஏமனில் படகு கவிழ்ந்ததில் சட்டவிரோத ஆப்பிரிக்கக் குடியேறிகள் 42 பேர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

திங்கள், மார்ச் 10, 2014

ஆப்பிரிக்காவில் இருந்து சட்டவிரோதக் குடியேற்றக்காரர்களை ஏற்றி வந்த படகு ஒன்று ஏமன் கரைக்கப்பால் கவிழ்ந்ததில் 42 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.


தெற்கு சாப்வா மாகாணத்தில் பீர் அலி கரையில் இந்த அனர்த்தம் நிகழ்ந்தது. மூழ்கிய படகில் இருந்த 30 பேரை ஏமனியக் கடற்படைக் கப்பல் காப்பாற்றி அகதி முகாமுக்குக் கொண்டு சென்றது.


ஆண்டு தோறும் சோமாலியா, எத்தியோப்பியா போன்ற நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான ஆப்பிரிக்கர்கள் இவ்வாறான ஆபத்தான பயணங்களை ஏமனுக்கு மேற்கொண்டு வருகின்றனர். பல நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.


மூலம்[தொகு]

Bookmark-new.svg