உள்ளடக்கத்துக்குச் செல்

ஐரோப்பாவில் நிறுவப்படவிருந்த ஏவுகணைத் தற்காப்புத் திட்டத்தை அமெரிக்கா கைவிட்டது

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, செப்டம்பர் 18, 2009, ஐக்கிய அமெரிக்கா:


போலந்திலும் செக் குடியரசிலும் ஏவுகணைத் தற்காப்பு வசதியை உருவாக்கும் திட்டத்தை அமெரிக்கா கைவிடுவதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தெரிவித்தது.


ஈரானின் நெடுந்தொலைவு ஏவுகணையால் ஏற்படக்கூடிய மிரட்டல், முன்பு நினைத்திருந்த அளவுக்கு மோசமில்லை என்பதால் இத்திட்டம் கைவிடப்படுவதாகப் பத்திரிகை குறிப்பிட்டது. முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் அறிமுகப் படுத்திய இத்திட்டத்தைப் பரிசீலிக்குமாறு அதிபர் பாரக் ஒபாமா உத்தரவிட்டிருக்கிறார்.


ஏவுகணைத் தற்காப்பு வசதி 2012ம் ஆண்டுக்குள் முழுமையாகச் செயல்படும் என எதிர்பார்க்கப் பட்டிருந்தது. பால்ட்டிக் கடலில் தடுப்புச் சாதனங்களை அமைக்க போலந்துடனும், ரேடார் நிலையம் அமைக்க செக் குடியரசுடனும் அமெரிக்கா சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒப்பந்தம் செய்தது.


ஐரோப்பிய நேச நாடுகளை அல்லது ஐரோப்பாவிலுள்ள அமெரிக்கப் படையினரை ஈரான் அல்லது மற்ற நாடுகளிலிருந்து பாதுகாக்க இந்த வசதிகள் தேவை என்று கூறப்பட்டது. ஆனால், ஈரானின் நெடுந்தொலைவு ஏவுகணைத் திட்டம், முன்பு கணித்த அளவுக்குத் துரித முன்னேற்றமடையவில்லை என்பதால், அமெரிக்கா அதன் முடிவை மாற்றுவதாகப் பத்திரிகை குறிப்பிட்டது.


அமெரிக்காவின் இம்முடிவு குறித்து ரஷ்ய அதிபர் திமீத்ரி மெத்வெதெவ் மகிழ்ச்சி தெரிவித்தார்.

மூலம்[தொகு]