உள்ளடக்கத்துக்குச் செல்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கையை ஆதரிக்க சீனா உறுதி

Checked
விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், பெப்பிரவரி 11, 2014

ஐக்கிய நாடுகள் மனித உரிமை கழக மாநாட்டில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தால் அதை எதிர்க்கப் போவதாக சீனா கூறியுள்ளது.


இலங்கை&சீனா தேசிய கொடிகள்

விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடைபெற்ற போரில் அப்பாவி மக்கள் பலர் கொல்லப்பட்டனர். இந்த மனித உரிமை மீறல் தொடர்பாக அமெரிக்கா இலங்கைக்கு எதிராக அடுத்த மாதம் நடைபெறும் ஐ.நா.சபை மாநாட்டில் தீர்மானம் கொண்டு வருகிறது. இதற்கு பல நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.


சீனாவுக்கான அதிகாரபூர்வப் பயணமொன்றை மேற்கொண்டுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி. எல். பீரிசுக்கும், சீனா வெளிவிவகார அமைச்சர் வோங் ஜீக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. அதன்போது, கருத்து வெளியிடும் போதே சீனா வெளிவிவகார அமைச்சர் இலங்கையின் உள் விவகாரங்களில் தலையிடும் உரிமை மற்ற நாடுகளுக்கு இல்லை. அந்நாடுகளை சீனாவும் எதிர்க்கிறது” “நாட்டின் பாதுகாப்பு, இறையாண்மை, ஒருமைப்பாட்டு விவகாரங்களில் மற்ற நாடுகள் தலையிடக்கூடாது. இலங்கையின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண அந்நாட்டுக்கு போதிய அறிவு உள்ளது” என்றும் வாங் தெரிவித்துள்ளார்.


மூலம்

[தொகு]