ஒட்டோமான் பேரரசின் கடைசி வாரிசு மரணம்

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search
தற்போதைய துருக்கி

வியாழன், செப்டம்பர் 24, 2009, இஸ்தான்புல், துருக்கி:


ஒட்டோமான் பேரரசின் கடைசி சுல்தானாக ஆட்சி செய்திருக்கக்கூடிய எர்துருகுல் உஸ்மன் என்பவர் தனது தொண்ணூற்று ஏழாவது வயதில் துருக்கியில் காலமானார்.


1920களில் துருக்கிய குடியரசு உருவாகிய காலகட்டத்தில் 1912 ஆம் ஆண்டில் எர்துகுருல் உஸ்மான், ஒட்டோமான் பேரரச குடும்பத்தில் பிறந்து, போஸ்போரஸ்ரில் உள்ள சுல்தான் அரண்மனையில் சிறு பிள்ளையாக விளையாடியிருந்தவர்.


ஆனால் இவர் தனது வாழ்நாளின் பெரும் பகுதியை கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் நியூயார்க்கில் உள்ள சாதாரண அடுக்குமாடிக் குடியிருப்பிலேயே கழித்திருந்தார். நவீன துருக்கியின் தோற்றுநரான கெமால் அடாதுருக்கினால் ஒட்டோமான் ராஜ குடும்பம் நாட்டை விட்டு துரத்தப்பட்டிருந்தது.


எந்தவித அரசியல் அபிலாசைகளும் அற்று அப்போது நாட்டை விட்டு வெளியேறியிருந்த உஸ்மான் 1990களில் அரசின் அழைப்பை ஏற்று நாடு திரும்பினார். ஆனாலும் அவர் தனக்கு எவ்வித அரச வரவேற்பையும் ஏற்க மறுத்து தனது தாத்தாவின் முந்தைய அரண்மனையை பார்க்க வந்த ஒரு சுற்றுலாக் குழுவோடு சேர்ந்துதான் மீண்டும் துருக்கிக்குள் நுழைந்திருந்தார்.


உஸ்மானின் மனைவி ஆப்கானிஸ்தானின் கடைசி மன்னரின் உறவினராவார்.

மூலம்[தொகு]