கசக்ஸ்தான் மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் 38 பேர் இறப்பு

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search
Kazakhstan political map 2000.jpg

ஞாயிறு, செப்டம்பர் 13, 2009, கசக்ஸ்தான்:


கசக்ஸ்தானின் தென்கிழக்குப் பகுதியிலுள்ள டால்டிகோர்கன் நகரில் போதை பழக்க ஒழிப்பு நிலையத்தில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்தனர்.


புள்ளிவிபரங்களின் படி, தீயிலிருந்து ஊழியர்கள், நோயாளர்கள் உட்பட 40 பேர் காப்பாற்றப்பட்டனர். 650 சதுரமீட்டர் பரப்பளவுக்கு தீ பரவியது. உள்ளூர் நேரப்படி காலை 6:31 மணி வரை, தீ கட்டுப்படுத்தப்பட்டது. மீட்பு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மூலம்[தொகு]