உள்ளடக்கத்துக்குச் செல்

கயானாவின் அதிபராக ஆடமா பார்ரோ தேர்வு பெற்றுள்ளார்

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், திசம்பர் 2, 2024

படிமம்:Yaya Jammeh.jpg
யாகுயா சமே

கயானாவின் அதிபராக ஆடமா பார்ரோ தேர்தலில் வெற்றி பெற்றார். ஆடமா பார்ரோ 45% வாக்குகளையும் கயானாவின் யதேச்சாதிகாரம் அதிபர் யாக்யா சமே 36.7% வாக்குகளையும் தேர்தலில் பெற்றனர். மூன்றாவதாக வந்த மாமா கந்தே 17.8% வாக்குகளை பெற்றார்


கயானா விடுதலை பெற்ற 1965ஆம் ஆண்டிலிருந்து எந்த ஆட்சி மாற்றமும் சுமுகமாக நடந்ததில்லை. நாட்டின் தலைவராக கடந்த 22 ஆண்டுகளாக பதவி வகித்த யாக்யா சமே தோல்வியடைந்துள்ளதாக அந்நாட்டின் தேர்தல் ஆணையத்தின் தலைவர் அலியு மொம்மர் நிச்சி நிச்சி அறிவித்துள்ளார்.


இந்த தேர்தல் முடிவு குறித்து இதுவரை யாகுயா சமேவிடமிருந்து எந்த கருத்தும் வெளிவரவில்லை. முன்னர், கடவுள் விருப்பப்பட்டால் தன்னால் ஒரு பில்லியன் ஆண்டுகள் கூட ஆட்சி செய்ய முடியும் என்று கூறியிருந்தார். சமேவின் தோல்வியை யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆட்சி மாற்றம் சுமூகமாக இருக்கும் என்று பெரும்பாலானவர்கள் எதிர்பார்க்கவில்லை.


அல்லா மட்டுமே அதிபர் பதவியை தன்னிடமிருந்து பறிக்கமுடியும் என்று இவ்வாரம் சமே கூறியிருதந்தார்.

1994 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி மூலம் அதிகாரத்திற்கு வந்த சமே, செய்தியாளர்கள், எதிர்க்கட்சிகள் மற்றும் ஒருபாலுறவுக்காரர்கள் நடத்தப்பட்ட விதம் குறித்து மனித உரிமை குழுக்களால் விமர்சனங்களுக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது. உள்ளூர் மூலிகைகளை கொண்டு தன்னால் எயிட்சை குணப்படுத்த முடியும் என்று சமே கூறியிருந்தார்


ஏழு எதிர்கட்சிகளின் கூட்டணியில் பாரோ போட்டியிட்டார். வெற்றி பெற்ற ஆடமா பாரோ 1965இல் சிறிய கிராமத்தில் பிறந்தார். இவர் இலண்டனில் படித்தவர்.



மூலம்

[தொகு]

|