உள்ளடக்கத்துக்குச் செல்

கராச்சியில் உணவுப் பொருட்களைப் பெறுவதில் உண்டான நெரிசலில் 20 பேர் இறப்பு

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், செப்டம்பர் 15, 2009, கராச்சி, பாகிஸ்தான்:


பாகிஸ்தானில் புனித ரமழானை முன்னிட்டு இலவசமாக வழங்கப்பட்ட உணவுப் பொருட்களைப் பெற்றுக் கொள்வதில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி இருபது பேர் உயிரிழந்தனர். பெண்கள், சிறுவர்களே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்தனர். மேலும் முப்பது பேர் வரை காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பாகிஸ்தானின் வர்த்தக நகரான கராச்சியில் இச்சம்பவம் சென்ற திங்கட்கிழமை இடம்பெற்றது.


புனித நோன்பை முன்னிட்டு தர்மஸ் தாபனமொன்று ஏழைகளுக்கு இலவசமாக கோதுமை மா, பேரிச்சம்பழம் போன்ற உணவுப் பொருட்களை வழங்கியது. இவற்றைப் பெற்றுக் கொள்வதற்காக பெரும் சன நெரிசல் ஏற்பட்டது. பெண்கள் சிறுவர்கள் இதில் சிக்கிப் பலியாகினர். 18 பெண்களையும் இர ண்டு குழந்தைகளையும் மீட்டெடுத்ததாக தேடும் பணியில் ஈடுபட்டோர் தெரிவித்த னர்.


முறையான ஒழுங்குபடுத்தலில்லாமல் விநியோக நடவடிக்கையில் ஈடுபட்ட தர்ம தாபன பொறுப்பாளர்களுக்கெதிராக நடவடிக்கையெடுக்கப்படுமென அரசாங்கம் அறிவித்துள்ளது.

மூலம்

[தொகு]