கரிபியன் பகுதியில் படகு மூழ்கியதில் பலர் இறப்பு

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search
துர்கசு கைகோசு தீவுகள்

செவ்வாய், சூலை 28, 2009 கரிபியன்:

கரிபியன் பகுதியில் துர்கசு கைகோசு தீவுப் பகுதியில் 200 எயிட்டிய சட்டவிரோதக் குடியேற்றவாசிகளுடன் சென்றுகொண்டிருந்த படகொன்று மூழ்கியதில் பலர் காணாமல் போயுள்ளனர்.


இதுவரை 15 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், 120 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க கரையோரப் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. மீட்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


மணற்திட்டிகளிலும் கற்பாறைகளிலும் தத்தளித்துக் கொண்டிருந்த 120 பேர் அமெரிக்க கரையோரக் கடற்படையினரால் மீட்கப்பட்டனர்.


பகாமாசு அல்லது புளோரிடாவில் வேலை வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்வதற்காக அதிக எண்ணிக்கையான எயிட்டியர்கள் படகுகள் மூலமாக சட்டவிரோதமாக குடியேற முயற்சிக்கின்றனர்.

மூலம்[தொகு]